Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
உதேஷி குழுமத்தின் நிர்மாண சாதனங்கள் பிரிவான UTRAX®, இதுவரையிலான ஒற்றை மாபெரும் ஹைட்ரோலிக் excavatorகள் ஓடரை வெற்றிகரமாக கையளித்துள்ளது. இதனூடாக இலங்கையின் வேகமாக விரிவாக்கமடைந்து வரும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகளுக்கு பங்களிப்பு வழங்க முன்வந்துள்ளது.
நாட்டின் முன்னணி வணிக மற்றும் தொழிற்துறை சாதனங்கள் விநியோகத்தரும் Sumitomo excavator களை இலங்கையில் விநியோகிக்கும் ஏக உரிமையைக் கொண்ட நிறுவனமுமான, உயர் தர Sumitomo Hydraulic excavatorகளை NEM Construction (Pvt) Ltd.இன் பணிப்பாளர் அஷ்வின் நானயக்காரவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்திருந்தது. 71 அலகுகளுடன், தெற்காசிய பிராந்தியத்தில் காணப்படும் Sumitomo hydraulic excavatorகளின் ஒற்றை மாபெரும் உரிமையாளர் எனும் பெருமையையும் பெற்றுள்ளது.
சாதனை மிகுந்த இந்த ஓடரில் மொத்தமாக 35 புத்தம் புதிய Sumitomo excavators, 30 model SH220LC-6 மற்றும் 5 model SH370LHD-6 போன்றன அடங்கியிருந்தன. மொத்தக் கொள்வனவுப் பெறுமதி 780 மில்லியன் ரூபாய்களாகும். இதற்கு முன்னர் 2015 ஆம் ஆண்டில் NEM Construction க்கான சாதனை மிகுந்த 500 மில்லியன் ரூபாய் எனும் பெறுமதியை கடந்து இந்தக் கொடுக்கல் வாங்கல் பதிவாகியிருந்தது.
அஷ்வின் நானயக்கார கருத்துத் தெரிவிக்கையில், “இந்த ஜப்பானிய SUMITOMO hydraulic excavators களின் தரம் மற்றும் வினைத்திறன் போன்றன துறையின் சிறந்ததாக அமைந்துள்ளன. UTRAX®இன் சிறந்த விற்பனைக்கு பிந்திய சேவைக்கு மேலதிகமாக, இந்த இயந்திரங்கள் 5000 மணி நேர உத்தரவாதத்தைக் கொண்டுள்ளதுடன், நவீன தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளன. SUMITOMO ஐச் சேர்ந்த ஜப்பானிய பொறியியலாளர்கள் எமது தொழிற்சாலைகளுக்கு அடிக்கடி விஜயம் செய்து, வினைத்திறனை கண்காணிப்பதுடன், பெறுமதி வாய்ந்த ஆலோசனைகளையும் வழங்குகின்றனர்.” என்றார்.
1980 ஆம் ஆண்டில் செயற்பாடுகளை ஆரம்பித்திருந்த NEM Construction, நாட்டின் முன்னணி சிவில் பொறியியல் ஒப்பந்தக்காரர்கள் எனும் பெருமையை பெற்றுக் கொண்டுள்ளது. நாட்டின் நெடுஞ்சாலைகள், நீர்ப்பாசனம், காணி மீட்டல் போன்ற உட்கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. NEM’இன் பிந்திய கையகப்படுத்தலுடன், இலங்கையின் மாபெரும் நிர்மாண இயந்திர சாதனங்களின் உரிமையாளர் எனும் நிலைக்கு உயர்ந்துள்ளது.
UTRAX®இன் முகாமைத்துவ பணிப்பாளர் சுபுன் எம் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “உலகத் தரம் வாய்ந்த வாகனத் தொடரணியைக் கொண்டிருப்பதற்காக NEM Construction உடன் கைகோர்த்துள்ளதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். இதனூடாக நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் எம்மால் பங்களிப்புகளை வழங்கக்கூடியதாக இருக்கும். நாட்டில் தொற்றுப் பரவல் காரணமாக பின்னடைவு காணப்பட்ட போதிலும், இது போன்ற ஓடர்களினூடாக இலங்கையில் எதிர்காலத்தில் நிர்மாணத்துறையில் காணப்படும் வாய்ப்புகள் பற்றி NEM இனங்கண்டுள்ளது.” என்றார்.
3 minute ago
4 minute ago
18 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
4 minute ago
18 minute ago
56 minute ago