2025 நவம்பர் 02, ஞாயிற்றுக்கிழமை

உலகத்தரம் வாய்ந்த சோடிகார்ட்பிராண்டி அறிமுகம்

Editorial   / 2025 செப்டெம்பர் 17 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்பீட்பே இலங்கைக்கு உலகத்தரம் வாய்ந்த சோடி கார்ட்கார்ட்களை கொண்டு வந்துள்ளது. கார்ட்ஸ் இப்போது மேம்பட்ட செயல் திறன் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பைக் கொண்டிருக்கும், பங்கேற்பாளர்கள் உலகளாவிய சோடி வேர்ல்ட்சீரிஸுக்கு (Sodi World Series). தகுதிபெறுவார்கள்.

  டேவிட் பீரிஸ் குழும நிறுவனங்களின் ஒரு பகுதியான ஸ்பீட்பே, 2025 செப்டம்பர் 11 வியாழக்கிழமை வாட்டர் ஸ்எட்ஜில் பிரத்யேக அறிமுகத்துடன் முதல் முறையாக உலகத்தரம் வாய்ந்த சோடிகார்ட்பிராண்டின் வருகையைக் குறிக்கிறது.

இது இலங்கையில் மோட்டார் விளையாட்டு பொழுது போக்கில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. 1981 ஆம் ஆண்டில் நான்டெஸுக்கு அருகிலுள்ள சௌட்ரானில் ஒரு பிரெஞ்சு உற்பத்தியாளரான கில்டாஸ்மெரியனால் நிறுவப்பட்ட சோடிகார்ட்(SODIKART), ஓய்வு மற்றும் போட்டிகார்ட்டிங் இரண்டிலும் உலகளாவிய முன்னணி தன்மையில் உள்ளது. 1998 ஆம் ஆண்டில் கூரோனில் கட்டப்பட்ட தொழிற்சாலைக்கு அதன் உற்பத்தியை நகர்த்தியதிலிருந்து, அனைத்து SODI செஸிகளும் துல்லியமான தரத்திற்கு வடிவமைக்கப்பட்டுள்ளன.

SODI ஆனது ஓய்வுக்கான SODI வாடகை கார்ட்டுகள், Tekneex மற்றும் MEKAONE பிராண்டுகளின் கீழ் போட்டிகள், பாகங்கள் மற்றும் SODI பந்தயசெஸி, டிரைவர்கியர் (ஹெல்மெட்கள், சூட்கள், கையுறைகள் போன்றவை) உட்பட பரந்த அளவிலான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குகிறது, இவை அனைத்தும் ITAKA நெட்வொர்க் மற்றும் ஆன்லைன் விற்பனை மூலம் சில்லறை விற்பனை செய்யப்படுகின்றன. இது 3MK நிகழ்வுகள் வழியாக முக்கிய கார்ட்டிங்நிகழ்வுகளைஏற்பாடுசெய்கிறது, குறிப்பாக சோடிவேர்ல்ட்சீரிஸ் (SWS) மற்றும் பிரான்சில் உள்ள சேலஞ்ச்ரோடாக்ஸ் தொடர், இவை அனைத்தும் ஐந்து கண்டங்களில் புதுமை, தொழில் நுட்பசிறப்பு, பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றிற்கான SODIKART இன் உலகளாவிய நற்பெயரை வலுப்படுத்துகின்றன.

முதல் தடவையாக, இலங்கை சாரதிகள் மற்றும் மோட்டார் விளையாட்டு ஆர்வலர்கள் உலகத்தரம் வாய்ந்த செயல் திறனை வழங்குவதற்காக வேகமான, நவீன மற்றும் அதி நவீன தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட கார்ட்களை செலுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த கார்ட்களில் முழுமையாக சரி செய்யக் கூடிய இருக்கைகள் மற்றும் பெடல்கள்உள்ளன,

இது ஒவ்வொரு ஓட்டு நரையும் கூடுதல் மாற்றங்கள் தேவையில்லாமல் அதே நேரத்தில் மிக உயர்ந்த அளவு பாதுகாப்பு மற்றும் வசதியைப் பராமரிக்கிறது.

இந்த தர முயர்த்தலின் மூலம், ஸ்பீட்பேபண்டாரகம சுற்று வட்டத்தில் உள்ள அனைத்து வாகனங்களும் இப்போது சோடிகார்ட்களாக இருக்கும், மேலும் ஒவ்வொரு சாரதியக்கும் ரேஸ்சூட் மற்றும் கியர் வழங்கப்படும், அனுபவத்தை தரப்படுத்துதல் மற்றும் இலங்கையில் கார்ட்டிங்கின் தொழில்முறை திறனை உயர்த்தும்,

முக்கியமாக, ஸ்பீட்பே வழியாக அனைத்து பங்கேற்பாளர்களும் இப்போது உலகின் மிகப்பெரிய கார்ட்டிங்போட்டிகளில் ஒன்றான சோடிவேர்ல்ட்சீரிஸ் (SWS) இல் சர்வதேச அளவில் போட்டியிட தகுதி பெறுவார்கள், இது 40 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஓட்டுநர்களின் அதே உலகளாவிய லீடர்போர்டில் அவர்களை இணைக்கும்

டேவிட்பீரிஸ் குழும நிறுவனங்களின் தலைவர் டேவிட்பீரிஸ், டேவிட்பீரிஸ் குழும நிறுவனங்களின் தலைவரும் முகாமைத்துவப்பணிப்பாளருமான ரோஹனதிசாநாயக்க, டேவிட்பீரிஸ்ரேசிங்அண்ட்லெஷர் (பிரைவேட்) லிமிட்டெட் மற்றும் டேவிட் பீரிஸ் சிட்டி டெவலப்மெண்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் ஆகியவற்றின் தலைவர் திரு. ஈஷான் பீரிஸ் மற்றும் சோடிகார்ட் ஆசியாவின் பணிப்பாளர், அலெக்ஸ்டவில் ஆகியோர் SODIKARTS இன் திறப்பு விழாவிற்கு தலைமை தாங்கினர். 

சோடிகார்ட் ஆசியாவின் பணிப்பாளர் அலெக்ஸ்தாவில் கருத்துத்தெரிவிக்கையில், "ஸ்பீட்பே மற்றும் டேவிட்பீரிஸ் குழுமத்துடன் இணைந்து சோடிகார்ட்டை இலங்கைக்கு கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கையில் மோட்டார்ஸ் போர்ட்ஸில் நாம் காணும் தெளிவான வளர்ச்சி, சர்வதேசத் தரத்திலான அனுபவங்களுக்கான ஆர்வம் மற்றும் ஸ்பீட்பே கொண்டு வரும் தொழில் முறை ஆகியவை இந்த கூட்டாண்மையைப் பற்றி எங்களை உற்சாகப்படுத்தின. இது ஒரு பெரிய வாய்ப்பைக்காட்டுகிறது, மேலும் எங்கள் கார்ட்கள் தரத்தை வரையறுக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.

டேவிட்பீரிஸ்ரேசிங்அண்ட்லெஷர்(பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் தலைவர் இஷான் பீரிஸ் கருத்துத் தெரிவிக்கையில், "மோட்டார்ஸ் போர்ட் எப்போதுமே எனது இதயத்திற்கு நெருக்கமாக உள்ளது, மேலும் SODI பிராண்டை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவது ஒரு முக்கிய மைல் கல்லாகும்.

இந்த வெளியீடு கார்ட்களின் மேம்பட்ட விவரக் குறிப்புகளைப் பற்றியது மட்டுமல்ல, ஒவ்வொரு ஓட்டுநருக்கும் உலகத்தரம் வாய்ந்த நிலையில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை வழங்குவதாகும். இந்த முயற்சியின் மூலம், நாங்கள் இலங்கையை உலகளாவிய கார்ட்டிங் வரைபடத்தில் உறுதியாக நிலை நிறுத்துகிறோம்.

IAME தொடர் ஸ்ரீலங்கா மற்றும் 12 மணி நேரகார்ட்டிங் சாம்பியன்ஷிப் போன்ற சர்வதேச தரத்திலான நிகழ்வுகளை நடத்திய ஸ்பீட்பேயின் அறிமுகமானது, உலகத்தரம் வாய்ந்த மோட்டார்ஸ் போர்ட்ஸை நோக்கிய இலங்கையின் வளர்ச்சியின் அடுத்த படியாகும், இது தொழில் முறை, உயர் செயல் திறன் கொண்ட கார்ட்டிங் அனுபவத்தை உள்ளூர் ஆர்வலர்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வருகிறது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X