Gavitha / 2021 ஜனவரி 25 , மு.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் குளோபல் இறப்பர் இன்டஸ்ட்ரீஸ், தனது டயர் தொழிற்சாலையை மேலும் விஸ்தரித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதனூடாக விவசாய தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் டயர்களின் உற்பத்தியை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், வருடமொன்றில் 750,000 டயர்களை உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்குமெனவும் அறிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டில், குளோபல் இறப்பர் இன்டஸ்ட்ரீஸ் 40 மில்லியன் டொலர்கள் முதலீட்டில் புதிய தொழிற்சாலையை ஆரம்பித்திருந்தது. புதிய விஸ்தரிப்பினூடாக, இந்த முதலீடு மேலும் 100 மில்லியன் டொலர்களால் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
புதிதாக விஸ்தரிக்கப்பட்ட பகுதியில் விவசாய டயர்கள் மற்றும் ரேடியல் டயர்கள் உற்பத்தி செய்யப்படும் என அறிவித்துள்ளது.
இந்த புதிய பகுதியின் உள்ளடக்கத்தினூடாக, பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையும் 500 ஆக அதிகரிக்கப்படும்.
இந்தத் தொழிற்சாலை சூரிய வலுவில் இயங்கும் ஆற்றல்களை கொண்டிருக்கும் என்பதுடன், 2.5 மெகா வாற்று வலுவை பிறப்பிப்பதாக அமைந்திருக்கும். இந்தத் தொழிற்சாலை பயோமாஸ் பொயிலர்களை பயன்படுத்தும்.
2 minute ago
10 minute ago
15 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
10 minute ago
15 minute ago
1 hours ago