2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

எயிட்கன் ஸ்பென்ஸ் ஹொட்டல் தொடரில் சலுகைகள்

Gavitha   / 2016 டிசெம்பர் 05 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் MasterCard கடன் அட்டை உரிமையாளர்களுக்கு 40% வரை விலைக்கழிவுகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில், எயிட்கன் ஸ்பென்ஸ் ஹொட்டல்ஸ் அன்ட் ரிசோர்ட்ஸ் உடன் இணைந்து புதிய திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது. இதனூடாக, வங்கியின் கடன் அட்டை உரிமையாளர்களுக்கு ஒப்பற்ற விடுமுறை அனுபவத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.  

நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் டிசம்பர் 20ஆம் திகதி வரை செல்லுபடியாகும் வகையில் முன்னெடுக்கப்படும் இந்தச் செயற்றிட்டம், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் பிளாட்டினம் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் சென்சூரியன் பிளாட்டினம் கடன் அட்டைகள் மற்றும் MasterCard வேர்ள்ட் கடன் அட்டை உரிமையாளர்களுக்கு பொருந்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினூடாக அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கோல்ட் கடன் அட்டைகள், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ப்ளுஃகிறீன் கடன் அட்டைகள் மற்றும் MasterCard பிளாட்டினம் கடன் அட்டை உரிமையாளர்களுக்கு 30% வரை விலைக்கழிவுகளையும் வழங்கவுள்ளது. இந்தப் பிரத்தியேகமான சலுகைகளுடன், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி கடன் அட்டை உரிமையாளர்களுக்கு தமது வேலைப்பளு நிறைந்த காலப்பகுதியில் தமது பண்டிகைக்காலத்தை, சொகுசு ஹொட்டல்கள் மற்றும் ரிசோர்ட்களில் தங்கியிருந்து அனுபவிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.  

இந்தச் சலுகைத் தொடர்பில், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் கார்ட்கள் பிரிவின் தலைமை அதிகாரி நிமேஷ் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “வங்கி எனும் வகையில், நாம் எப்போதும் எமது அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் உரிமையாளர்களின் வாழ்க்கைத்தரத்துக்கு சொகுசான தங்குமிடங்கள் என்பது அனுகூலங்களை வழங்குவதாக அமைந்திருக்கும் என்பதில் நம்பிக்கைக் கொண்டுள்ளோம். இதுபோன்ற பிரிவிலேஜ்களுடன், எமது கார்ட் உரிமையாளர்கள் தற்போது விடுமுறைக்காலத்தை தமக்கு பிடித்தமான எயிட்கன் ஸ்பென்ஸ் ஹொட்டல் அன்ட் ரிசோர்ட்களில் பெருமளவு சேமிப்புகளுடன் செலவிட முடியும். எமது அட்டை உரிமையாளர்களுக்கு சிறந்த விடுமுறை கொடுப்பனவைப் பெற்றுக்கொடுப்பது என்பது எமது எதிர்பார்ப்பாகும். எயிட்கன் ஸ்பென்ஸ் உடனான பங்காண்மையின் ஊடாக, இந்த இலக்கை நோக்கி உறுதியாக எம்மால் பயணிக்கக்கூடியதாக உள்ளது. எமது சகல அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் MasterCard கடனட்டை உரிமையாளர்களை இந்த சலுகையை பெற்றுக்கொள்ள வருமாறு நான் இத்தால் அழைப்புவிடுக்கிறேன்” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X