Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 10 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனித உரிமைகள், சட்ட விதிமுறைகள், ஜனநாயகம் ஆகியன ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான விழுமியங்களாக அமைந்துள்ளன.
நிலைபேறான சமாதானம், உறுதித்தன்மை, நீண்ட கால அபிவிருத்தி, சுபீட்சம் போன்றன மனித உரிமைகள், ஜனநாயக அமைப்புகளின்றி நிலைத்து நிற்க முடியாது.
தமது எல்லைகளிலும், இதர நாடுகளுடன் தொடர்புகளை பேணும் போது இந்த விழுமியங்கள், கொள்கைகளை உயர்வடையச் செய்து பேணும் நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுக்கின்றது.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று, இலங்கை, மாலைதீவுகளுக்காக ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவால் இலங்கையின் மனித உரிமைகள், சிவில் சமூகத்தை பேணும் நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்கும் புதிய திட்டங்களை அறிமுகம் செய்திருந்தது.
இந்த ஏழு திட்டங்களையும் முன்னெடுப்பதற்கு ஜனநாயகம், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய சாதனம் (EIDHR), சிவில் சமூக அமைப்புகள் மற்றும் உள்நாட்டு அதிகாரசபைகள் தொனிப்பொருள் சாதனம் (CSO/LA) ஆகியன நன்கொடை வழங்குகின்றன.
பின்வரும் சிவில் சமூக அமைப்புகளுக்கு 813.7 மில்லியன் ரூபாய்களை (4 மில்லியன் யூரோக்கள்) ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும். ACTED, SRI LANKA CENTRE FOR DEVELOPMENT FACILITATION, Search for Common Ground, Helvetas Intercooperation GGMBH, Chrysalis, Humanity & Inclusion and FAGLIGT FALLES FORBUND FORENING – 3F. இந்த அமைப்புகள் உள்நாட்டு பங்காளர்களுடன் இணைந்து சமூக உரிமைகள், பெண்கள் வலுவூட்டல் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.
உள்நாட்டு சமூகங்கள், பங்காளர்களான ஊடகங்கள், சட்டத்தரணிகள், பெண்கள் உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் திறன்களை கட்டியெழுப்புவதில் இந்த திட்டங்கள் முக்கிய பங்காற்றும்.
உத்தியோகபூர்வ அறிமுக நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் தூதுவர் டெனிஸ் சைபி கருத்துத் தெரிவிக்கையில், “மனித உரிமைகள் என்பதை சாதாரணமான விடயமாக கருதக்கூடாது. இன்னும் நடைமுறையிலுள்ள இன்னல்களை நாம் அறிவோம்” என்றார்.
கடந்த 10 வருடங்களாக, இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கு உதவுவதற்காக, சுமார் 80 திட்டங்களுக்கு ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய சாதனம் (EIDHR) மற்றும் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் உள்நாட்டு அதிகார சபைகள் தொனிப்பொருள் சாதனம் (CSO/LA) ஊடாக ஐரோப்பிய ஒன்றியம் நிதி உதவிகளை வழங்கிய வண்ணமுள்ளது (25 மில்லியன் யூரோக்கள் பெறுமதி வாய்ந்தவை).
கிராமிய அபிவிருத்தி, மனிதநேய உதவி, நல்லிணக்கம், ஆட்சி மற்றும் பொது நிதி முகாமைத்துவம் போன்ற பல்வேறு பிரிவுகளில் ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை பரஸ்பர ஒன்றிணைவினூடாக (கடந்த தசாப்த காலத்தில் சுமார் 760 மில்லியன் யூரோக்கள் - 123 பில்லியன் ரூபாய்) வழங்கப்பட்டதற்கு மேலதிகமாக இந்த உதவி அமைந்துள்ளது.
13 minute ago
15 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
15 minute ago
26 minute ago