2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஒக்டோபரில் செலான் கொழும்பு மோட்டார் வாகனக் கண்காட்சி - 2018

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘செலான் கொழும்பு மோட்டார் வாகன கண்காட்சி’ (Seylan Colombo Motor Show) BMICH வளாகத்திலுள்ள ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் ஒக்டோபர் 19ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை மூன்று தினங்களுக்கு இடம்பெறவுள்ளது.   

ஆசியா எக்சிபிசன் அன்ட் கன்வென்சன்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தினால் 11ஆவது தடவையாக இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக் கண்காட்சியின் ‘முதன்மை அனுசரணையாளராக’ (Title Sponsor) தொடர்ந்து 4ஆவது வருடமாகவும் செலான் வங்கி ஒன்றிணைந்து செயற்படுகின்றது.   

இந்தக் கூட்டுமுயற்சியால் எய்தப்பட்ட குறிப்பிடத்தக்க மைற்கல்லான சாதனைகள், இலங்கையின் மோட்டார் வாகன தொழில்துறையை மேலும் பலப்படுத்துவதற்கு கணிசமான பங்களிப்புச் செய்திருக்கின்றன. முன்னொருபோதுமில்லாத அளவுக்கு பக்குவத் தன்மை கொண்டதாகவும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படும் நிகழ்வாகவும் முன்னேறியுள்ள இக் கண்காட்சியானது பல்லாயிரக்கணக்கானோரால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டுள்ள நிகழ்வாகக் காணப்படுகின்றது.

இவர்கள், கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளவற்றை பார்வையிடவும், அதேபோன்று மோட்டார் வாகனத் துறையின் முன்னணி உற்பத்தியாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்காகவும் வருடந்தோறும் இக் கண்காட்சிக்கு வருகை தருகின்றனர்.   

“மோட்டார் வாகன ஆர்வலர்களின் விருப்பதிற்கு ஏற்றாற்போல் இக் கண்காட்சியை நாம் ஒவ்வொரு வருடமும் உயர்தரமானதாக மேம்படுத்தி இருக்கின்றோம். இங்கு காட்சிப்படுத்தப்படும் பரந்துபட்ட வகைகளிலான மோட்டார் கார்கள் மற்றும் மோட்டார் வாகன துணைப் பொருத்துகள் ஊடாகவும், இதில் கலந்து கொள்ளும் மிக முன்னேற்றகரமான அறிவை வழங்குகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களிடமிருந்தும் இந்த ஆர்வலர்கள் அனுகூலங்களை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். கடந்த வருடம் இடம்பெற்ற கண்காட்சிக்கு 80,000 என்ற பெருமளவிலான பார்வையாளர்கள் வருகை தந்திருந்த அதேநேரத்தில், இலங்கையின் மோட்டார் வாகனத் துறையை தொடர்ச்சியாக பலப்படுத்தும் இக்கண்காட்சியால் உருவாகியுள்ள பல்வேறு பொருட்கள் சேவைகளின் ஓரிட விற்பனை நிலையம் போன்ற வசதியையும் அவர்கள் உயர்வாக மதிப்பிட்டிருந்தனர்” என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .