2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ஒடெல்லின் Fall 2016 தெரிவுகள்

Gavitha   / 2016 செப்டெம்பர் 14 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவநாகரீகங்களைக் கண்டுபிடித்து வழி நடத்தும் நிறுவனமான ஒடெல், falls  2016 கொண்டாட்டத்தை முன்னெடுத்திருந்தது. வரலாற்றின் இடைக்கால அல்லது மத்திய கால மன்னர் பாரம்பரிய ஆடம்பரத்தை அப்படியே கண் எதிரே கொண்டுவரும் வகையிலான புதிய தெரிவுகள் இதில் இடம்பெற்றிருந்தன.   

‘நவீன இடைக்காலம்’ எனும் தொனிப் பொருளில் இவை அமைந்துள்ளன. சிபொன், டெக்ஸ்சர்ட் சில்க், வெல்வெட், பட்டு, கிரீப், விஸ்கொஸ், லேஸ் என இன்னும் பற்பல நாடக பாணி செழுமை மற்றும் நிலைத்து நிற்கும் புத்துயிர் தன்மை கொண்டவையாக இந்த தெரிவுகள் அமைந்துள்ளன.   

வரலாற்றின் இடைக்கால ஆடம்பர நிகழ்வுகளின் போது அணியப்படும் ஆடைகளை நினைவில் கொண்டுவரும் வகையிலான கடும் நிறத்தில் செழுமை மிக்க வேலைப்பாடுகளை இவை கொண்டுள்ளன. கடும் நீலம், கடும் சிவப்பு, மென்மையான நீலச் சாயல், இளஞ்சிவப்பு, பொன்னிறம் மற்றும் ஊதா நிறம் என பல வர்ணங்களில் பல கலவைகளில் இந்தத் தெரிவுகள் காணப்படுகின்றன.   

ஒடெல்லின் பெக்ஸ்டேஜ் பிரிவு இவற்றுக்குப் பொருத்தமான நகைத் தெரிவுகளையும் ‘கொஸ்ட்டியும் டிராமா’ எனும் தொனிப் பொருளில் அறிமுகம் செய்துள்ளது. falls 2016 வரலாற்று இடைக்கால வடிவமைப்பு தெரிவுகளுக்கு ஒத்ததாக இவை அமைந்துள்ளன. இந்த வினோதமான நவ நாகரிகத் தெரிவுகளுக்கு மேலும் மெருகூட்டும் வண்ணம் இவை அமைந்துள்ளன. தங்கம் மற்றும் வெள்ளி நிறங்களில் இந்த ஆபரணத் தெரிவுகள் பொருத்தமான கற்களும் பதிக்கப்பட்டு வரலாற்று காலத்தை நினைவு கூறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எமது புதிய தெரிவுகள் அற்புதமானவை, பண்புகளில் மிகவும் ஆழமானவை’ என்று சொப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் டெஸிரி கருணாரத்ன கூறினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X