Editorial / 2020 ஒக்டோபர் 02 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

இரண்டு தசாப்தங்களாக இலங்கையின் வணிக வனாந்தரச் செய்கையில் முன்னோடியாகத் திகழும் சதாஹரித பிளான்டேஷன்ஸ், தனது வாடிக்கையாளர்களுக்காக ஒப்பற்ற லோயல்டித் திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது.
இந்த அறிமுக நிகழ்வில் சதாஹரித பிளான்டேஷன்ஸ் சிரேஷ்ட முகாமைத்துவத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையைச் சேர்ந்தவர்கள், துறைசார் முன்னோடிகள், பிரதம நிறைவேற்று அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் விசேட விருந்தினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட திட்டத்தினூடாக, உறுதியான உறவை கட்டியெழுப்பிக் கொள்ள உதவுவது மாத்திரமன்றி, 30,000 க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற சலுகைகளையும் அனுபவங்களையும் பெற்றுக் கொள்ள ஏதுவாக அமைந்திருக்கும்.
வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகளை திரட்டிக்கொள்ளக்கூடிய பாரம்பரிய லோயல்டித் திட்டத்தைப் போலன்றி, இந்த சதாஹரித பிரிவிலேஜ் கார்ட் றிவோர்ட்ஸ் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு விலைக்கழிவுகள் மற்றும் விசேட அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். பணம் அல்லது டெபிட்ஃகிரெடிட் கார்ட் போன்ற எந்தவொரு முறையிலான கொடுப்பனவுக்கும் அனுகூலத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த அறிமுகம் தொடர்பாக சதாஹரித பிளான்டேஷன்ஸ் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர், ஜயம்பதி மிராண்டோ கருத்துத் தெரிவிக்கையில், “எமது நீண்ட கால வாடிக்கையாளர்களை கௌரவித்து வெகுமதியளிக்க முடிந்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். இன்று முதல், எமது சகல வாடிக்கையாளர்களுக்கும் விறுவிறுப்பான, பொருத்தமான ரிவோர்ட்களை அனுபவித்து மகிழலாம். இது எமது வாடிக்கையாளர்களுக்கு மாத்திரமன்றி, பங்காளர்களுக்கும் அனுகூலமளிப்பதாக அமைந்திருக்கும். எதிர்காலத்தில் தற்போதைய மற்றும் புதிய விற்பனையாளர்களுடனும் வர்த்தக நாமங்களுடனும் இணைந்து பெறுமதி வாய்ந்த ரிவோர்ட்களை வாடிக்கையாளர்களுக்கு மாத்திரமன்றி, இந்தத் திட்டத்துடன் இணைந்து கொள்ளும் அனைவருக்கும் வழங்கத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
இந்தத் திட்டமானது, வளர்ந்து வரும் 60 முன்னணி விற்பனை நிலையங்களுடன் கைகோர்த்துள்ளது. இதில் விருந்தோம்பல், கல்வி/கல்விசார், வைத்தியசாலைகள், மின்சாதனங்கள், ஆடைகள் போன்றன அடங்கியுள்ளன. எதிர்வரும் மாதங்களில் இந்த வரிசையில் மேலும் பல சலுகைகள் மற்றும் விற்பனை நிலையங்களை உள்வாங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
வருடாந்தக் கட்டணம் அல்லது மறைமுக கட்டணம் கொடுப்பனவுகள் எதுவுமில்லை. வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரு தடவைக்கான நிர்வாக கட்டணம் மாத்திரம் அறவிடப்படும். தமது வாடிக்கையாளர்களுக்கு உயர் மட்ட விலைக்கழிவுகள் மற்றும் சிறந்த சலுகைகளை இந்த லோயல்டி தி;ட்டத்தினூடாக வழங்கி, அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்த சதாஹரித திட்டமிட்டுள்ளது.
7 minute ago
12 minute ago
23 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
23 minute ago
36 minute ago