Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2017 பெப்ரவரி 07 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெயார்வேய்ஸ் ஹோல்டிங்ஸ் தனது சமீபத்திய குடியிருப்புத் தொகுதித் திட்டமான பெயார்வேய்ஸின் லற்றிரியூட் அடுக்குமாடித் தொகுதியின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துள்ளது. கிருலப்பனை, ஹைலெவல் வீதியை முகப்பாகக் கொண்ட வகையில் இது நிர்மாணிக்கப்படுகிறது. பெயார்வேய்ஸின் லற்றிரியூட் மாடிக் கட்டடமானது, தலைநகரான கொழும்பின் மத்திய பகுதியில் ஒப்பற்ற விதத்தில் உருவாக்கப்பட்ட 120 வீடுகளைக் கொண்ட குடியிருப்புத் தொகுதியைக் கொண்டிருக்கும்.
20 மாடிகளைக் கொண்ட பெயார்வேய்ஸின் லற்றிரியூட், தனது தனித்துவமான அடையாளத்தின் மூலம் கொழும்பின் வான் வெளி வரைக்கும் பங்களிப்புச் செய்கின்றது. 15 மாடிகள் இரண்டு மற்றும் மூன்று படுக்கை அறைகளைக் கொண்டதாக அமைந்திருக்கும் அதேவேளை, முதல் ஐந்து மாடிகளும் வீட்டு உரிமையாளர்களுக்குரிய வாகனத் தரிப்பிட வெளியினையும், முற்றிலும் பூர்த்தி செய்யப்பட்ட பல்பொருள் அங்காடி ஒன்றினை அடித்தளத்திலும் கொண்டிருக்கும். இவ்வளாகம், குடியிருப்பாளர்களுக்கு நவீன உடற்பயிற்சிக் கூடம், மேற்தளத்தில் அமைந்த வியத்தகு நீச்சல் தடாகம், சுங்கக் கட்டடம், தடாகத்துடன் இணைந்த ஓய்விடம் மற்றும் BBQ வெளி என்பவற்றை வழங்குகின்றது.
பெயார்வேய்ஸ் ஹோல்டிங்ஸ், 2003ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் ஆயிரத்துக்கு அதிகமான குடியிருப்புத் தொகுதிகளை இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் நிர்மாணித்து வழங்கியுள்ளது. 12 வருடங்களுக்கும் மேற்பட்ட திறமையான அனுபவத்தைக் கொண்டுள்ளதும், தொழிற்றுறை முன்னோடிகளில் ஒன்றுமான இந்த நிறுவனமானது, தனது நிர்மாணத் திட்டங்களின் நம்பகத்தன்மை மற்றும் நீண்டகால உறுதிப்பாடு என்பனவற்றின் காரணமாக, மக்கள் மத்தியில் வலுவான நன்மதிப்பினையும் பெற்றிருக்கின்றது.
இதன் விளைவாக, பெயார்வேய்ஸ் குடியிருப்புத் தொகுதிகளானவை, காலப்போக்கில் முன்மாதிரியான வருமானங்களைப் பெற்றுத்தரும், பாதுகாப்பானதும், சிறந்ததுமான முதலீட்டு வாய்ப்பு என்னும் கௌரவத்தை சந்தேகமின்றிப் பெற்றுக் கொண்டமையாகக் காணப்படுகின்றது. பெயார்வேய்ஸ் ஹோல்டிங்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி இமால் பொன்சேகா அவர்களைப் பொறுத்த வரையில், எண்ணிக்கையில் அதிகரித்துள்ள கொள்வனவுகள், மீண்டும் வரும் வாடிக்கையாளர்களாலும், தற்போதுள்ள வாடிக்கையாளர்களின் சிபார்சுகளின் அடிப்படையிலும் ஏற்பட்டதாகும். காலப்போக்கில் பெயார்வேய்ஸ், குடியிருப்புத் தொகுதிகளில் தனித்துவமான சேவைகளை வழங்குகின்றது என்னும் கருத்து சந்தையில் பேசப்பட்டு வருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .