2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

கீல்ஸ் சுப்பர் அறிமுகப்படுத்தும் Super Fresh Chicken

Gavitha   / 2017 பெப்ரவரி 07 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கீல்ஸ் சுப்பர், தனது வாடிக்கையாளர்களுக்கு புத்தம் புதிய, ஊட்டச்சத்து மிக்க, மிகச் சிறந்த உற்பத்திகளை வழங்குவதை முன்னிட்டு “Super Fresh Chicken” என்ற கோழி இறைச்சி உற்பத்தியை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த உற்பத்தியை நாடளாவியரீதியிலுள்ள 60இற்கும் மேற்பட்ட கீல்ஸ் விற்பனை நிலையங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும்.  

இந்தப் புதிய உற்பத்தியின் அறிமுகம் தொடர்பில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் சில்லறை வர்த்தகப் பிரிவின் தலைமை அதிகாரியான கிஹான் குரே கருத்து வெளியிடுகையில், “நாம் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய உற்பத்தியின் மூலமாக மிகச் சிறந்த தரம் மற்றும் ஊட்டச்சத்தை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கவேண்டும் என்பதில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். புத்தம் புதிய உற்பத்திகளை வழங்கும் முயற்சியை நாம் எப்போதும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதுடன், தற்போது இந்த உற்பத்தியை அறிமுகப்படுத்தியதன் மூலமாக, புத்தம் புதிய உற்பத்திகளை வழங்கும் எமது உறுதிமொழியை மேலும் முன்னெடுத்துச் சென்று, சுவை மிக்கது மட்டுமன்றி, ஊட்டச்சத்தும் நிரம்பிய “Super Fresh Chicken” என்ற கோழி இறைச்சியை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றோம்,” என்று குறிப்பிட்டார்.  

“கீல்ஸ் சுப்பரில் மட்டுமே Super Fresh Chicken கிடைக்கப்பெறுகின்றது,” என கீல்ஸ் சுப்பரின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதித் தலைமை அதிகாரியுமான சரித சுபசிங்க அவர்கள் குறிப்பிட்டார். “பண்ணையிலிருந்து, கீல்ஸ் சுப்பர் வரை பின்பற்றப்படும் கடுமையான சுகாதாரக் கட்டுப்பாட்டு தர நடைமுறைகள், முழுமையான செயல்முறையிலும் தரம் பேணப்படுவதை உறுதிசெய்கின்றன.  

இறைச்சியின் புத்தம் புதிய தன்மை கெட்டுப்போகாது இருப்பதற்காக, கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் இறைச்சி பொதி செய்யப்படுகின்றது. இறைச்சியானது “Cold Chain” என அழைக்கப்படுகின்ற, வெப்பநிலை-கட்டுப்படுத்தப்பட்ட வழங்கல் முறைமையின் மூலமாக, 24 மணி நேரத்திற்குள் பண்ணையிலிருந்து, கீல்ஸ் சுப்பருக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. வாடிக்கையாளர்களுக்கு புத்தம் புதிய மற்றும் உயர் தரம் கொண்ட கோழி இறைச்சி கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யும் வகையில், அந்த வெப்பநிலை கீல்ஸ் சுப்பரில் தொடர்ந்தும் பேணப்படுகின்றது,” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிடடார்.  

“கோழி இறைச்சி புத்தம் புதியதாக உள்ள போது அதன் தன்மையும், ஊட்டச்சத்துக்களுக்கும் பேணப்படுகின்றன. மேலும், அதிக சாற்றுத்தன்மையும், சுவையும் கொண்டிருப்பதால் உங்களது உணவில் மகத்தான இணைப்பாக அது அமைந்துள்ளது,” என்று கீல்ஸ் சுப்பரின் சிரேஷ்ட உணவுத்திட்ட நிபுணரும், ஊட்டச்சத்து ஆலோசகருமான சிகிரிட் டி சில்வா குறிப்பிட்டார்.  

புத்தம் புதிய உற்பத்திகளை வழங்குவதில் தனித்துவமான அடையாளத்தைப் பேணி வருகின்ற கீல்ஸ் சுப்பர், அதற்கு உற்பத்திகளை வழங்குகின்ற அனைத்து வழங்குனர்கள், ஊழியர்கள் மற்றும் முகாமைத்துவம் என அனைத்து தரப்பினரும் அதியுயர் தர நடைமுறைகளைப் பேணுகின்ற புத்தம் புதிய உற்பத்திகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் அர்ப்பணிப்புடன் உள்ளனர். “புத்தம் புதிய உற்பத்திகளுக்கான உறுதிமொழியின்” மற்றும் ஒரு அங்கமாக, ஊட்டச்சத்து மற்றும் சுவை நிரம்பிய, மிகச் சிறந்த உற்பத்திகளை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளதுடன், தரக்கட்டுப்பாட்டு நடைமுறைகளைப் பேணிவருகின்றது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X