Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 செப்டெம்பர் 25 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் துணை நிறுவனமான ஃபியுச்சர் ஒடோமொபைல்ஸ் இலங்கையில் Ford மோட்டர் கம்பனியின் தயாரிப்புகளை விநியோகிக்கிறது. இந்நிறுவனம் கிளிநொச்சியில் விவசாய வாழ்வாதார செயற்றிட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் ஜப்பான் அவசர அரச சார்பற்ற நிறுவனம் (JEN) உடன் கைகோர்த்துள்ளது.
Ford இன் நிதியைக் கொண்டு, (JEN) அமைப்பு, புலம்பெயர்ந்து பின்னர் மீண்டும் தமது பகுதிகளுக்கு மீண்டு வந்துள்ளவர்களுக்கு விவசாய செயற்பாடுகளின் மூலமாக தமது வாழ்வாதாரங்களை மேம்படுத்திக் கொள்வதற்கு உதவிகள் வழங்கப்படவுள்ளன. JEN இன் செயற்றிட்டம் என்பது உலர் காலப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்வதுக்கு உதவும் வகையில் விவசாய கிணறுகளை நிர்மாணித்து வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளது.
இதன் மூலம் நீண்ட கால அடிப்படையில் வருமான அதிகரிப்பை பெற்றுக் கொள்ள உதவுவதுடன், சுய தங்கியிருத்தலை எய்துவதற்கும் பங்களிப்பு வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் இரு பிரதான இலக்குகளை எய்த பங்களிப்பு வழங்க திட்டமிட்டுள்ளது. முதலாவதாக, நீரைப் பெற்றுக் கொள்வதனூடாக விவசாயிகளுக்கு தமது விவசாய செயன்முறைகளை விஸ்தரிக்கவும், வருமான அதிகரிப்பை பெற்றுக் கொள்ளவும், இரண்டாவதாக, சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சமாளிப்பதற்கு இணைந்து செயலாற்றுவதன் மூலம் சமூகத்துக்கு வலுச்சேர்ப்பதையும் கவனத்தில் கொண்டுள்ளது.
கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்துக்கான செலவீனத்தில் ஒருபகுதியை ஈடுசெய்வதற்கு Ford இன் நிதிப்பங்களிப்பு என்பது பங்களிப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக 54 குடும்பங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். இந்த திட்டத்துக்கான நிதி வழங்கல் என்பது, Ford இன் காப்பு மற்றும் சூழல் வழங்கல்கள் திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டிருந்தது. 2014 இல் Ethisphere இனால் தொடர்ச்சியான ஐந்தாவது ஆண்டாக உலகின் மிகச்சிறந்த ஒழுக்கநெறி வாய்ந்த நிறுவனமாக Ford தெரிவு செய்யப்பட்டிருந்தது. அமெரிக்காவின் 100 சிறந்த கூட்டாண்மை குடிமகன்கள் தரப்படுத்தலில் ஒன்றாக கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு சஞ்சிகையினால் Ford தரப்படுத்தப்பட்டிருந்தது.
இலங்கையில் JEN இன் செயற்பாடுகள் 2005 இல் ஆரம்பமாகியிருந்தது.
32 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
3 hours ago