Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
சியெட் மோட்டார் ஒட்ட அணி உள்ளுர் போட்டிகளில் தனது முத்திரையை பதித்துள்ளது. கஜபா சுபர்குரொஸ் போட்டிகளில் அது முக்கியமான வெற்றிகளை ஈட்டியுள்ளது. கார் குழுவுக்கான சாம்பியன்ஷிப், சாம்பியன் ரைடர் கிண்ணம் என்பனவற்றை வென்று 15 பிரிவுகளில் இறுதி இலக்கையும் எட்டியுள்ளது.
ஜெக்ஸ் குணவர்தன் 175 cc க்கு மேற்பட்ட 250 cc க்கு உட்பட்ட MX குழு பிரிவில் வெற்றியீட்டியதோடு இதே பிரிவில் ரேஸ் இரண்டில் இரண்டாம் இடத்தை பிடித்து சாம்பியன் ரைடராகத் தெரிவானார். இதேவேளை ஆறு இரண்டாம் இடங்களை உபுல்வன் சேரசிங்க, ஜனக டயஸ், உஷான் பெரேரா ஆகியோர் தலைமையிலான சாரதிகள் அணி வென்று கார் குழு சாம்பியன்ஸிப்பையும் கைப்பற்றிக் கொண்டது.
கஜபா சுபர்குரொஸ்ஸில் 3500 cc க்கு உட்பட்ட பிரிவில் போட்டியிட்ட சகல சியெட் அணி சாரதிகளும் உரிய இலக்கை அடைந்தமை இந்தப் போட்டியின் சிறப்பான அம்சமாக அமைந்தது.
2015 பருவ காலத்துக்கான சியெட் மோட்டார் ஓட்டப் போட்டி அணி உபுல்வன் சேரசிங்க, ஜனக்க டயஸ், பசிந்து பீரிஸ், உஷான் பெரேரா, லலின் கிரிந்த, பிரசன்ன டி அல்விஸ், லெப்டினன்ட் கேர்ணல் துமிந்த ஜயசிங்க, லெப்டினன்ட் கேர்ணல் இந்து சமரக்கோன், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஜெக்ஸ் குணவர்தன, சம்பத் குமார ஆகியோரை உள்ளடக்கியதாகும்.
வருடாந்தம் CEAT-SLADA சாம்பியன்ஷிப்புக்காக SLADA வால் நடத்தப்படும் ஆறு போட்டிகளிலும் சியெட் அணி பங்கேற்றுள்ளது. பொக்ஸ் ஹில் சுபர்குரொஸ், கன்னர்ஸ் சுபர்குரொஸ், சீகிரிய ரெலிகுரொஸ் என்பனவற்றிலும் அது தொடர்ச்சியாகப் பங்கேற்று வருகின்றது. கவல்ரி சுபர்குரொஸ், ரொதர்ஹாம் கட்டுகுருந்த சர்கிட் மீட் என்பனவே இன்னும் எஞ்சியுள்ளன. 2015 கார் குழு அணியில் சியெட் அணி பிரதான போட்டியாளராகத் திகழ்ந்தது.
சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனம் வருடாந்த CEAT-SLADA மோட்டார் சாம்பியன்ஷிப் போட்டிகளின் பிரதான அனுசரணையாளராகும். இது தவிர இலங்கை இராணுவம் மற்றும் விமானப் படை என்பன ஏற்பாடு செய்யும் பல போட்டிகளுக்கும் இது அனுசரணை வழங்குகின்றது.
அதி சிறந்த செயற்பாடுகளில் தனது கட்டமைப்பைக் கொண்டுள்ள உலகளாவிய டயர் வர்த்தக முத்திரையான சியெட் இலங்கையில் மிக அதிகளவு விற்பனையாகும் டயர் முத்திரையாகும்.தற்போது இந்தியாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள சியெட் உலகளாவிய ரீதியில் 110 நாடுகளில் நிலைகொண்டுள்ள ஒரு வர்த்தக முத்திரையாகும். 1924ம் ஆண்டு காலப்பகுதியில் இத்தாலியில் தோற்றம் பெற்ற Cavi Electrici Affini Torino, அல்லது Electrical Cables & Allied Products of Turin, என்பதன் சுருக்க வடிவமாகவே இது உள்ளது.
17 minute ago
58 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
58 minute ago
1 hours ago
4 hours ago