Nirosh / 2021 ஜூன் 14 , பி.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் நிலைமைகளால், வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொண்டவர்கள், லீசிங் (LEASING) செலுத்தி வருபவர்களுக்கு நிவாரணங்கள் தேவை என்றால், அதுதொடர்பில் அந்தந்த நிறுவனங்கள், வங்கிகளுக்கு எழுத்துமூலமாக கோரிக்கை ஒன்றை விடுத்து நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென மத்திய வங்கி அறிவித்துள்ளது.
வங்கிகளில் பெற்றுக்கொண்ட கடன்களை செலுத்துவோர், லீசிங் செலுத்தி வருவோருக்கு இம்மாதம் 21ஆம் திகதிக்கும் முன்பும், வங்கியற்ற நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களைப் பெற்றுக்கொண்டோருக்கு இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்பும் நிவாரணங்கள் தேவை என்றால் எழுத்துமூலமாகக் கோரிக்கை விடுக்க வேண்டுமெனவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கடன்களைப் பெற்றவர்களுடன் கலந்துரையாடி இணக்கப்பாடொன்றுக்கு வர வேண்டுமென வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் மத்திய வங்கிய அறிவுறுத்தியுள்ளது. மேலும், இதில் ஏதாவது சிக்கல்கள் இருக்குமாக இருந்தால், 0112477966 எனும், மத்திய வங்கியின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு அறிவிக்க முடியுமெனவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

29 minute ago
6 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
6 hours ago
27 Jan 2026