2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கன்ரிச் ஃபினான்ஸ் விளக்கம்

S.Sekar   / 2021 ஜூன் 03 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் புலனாய்வுப் பிரிவு (FIU) வெளியிட்ட ஊடக அறிக்கையில், கன்ரிச் ஃபினான்ஸ் லிமிடெட் அடங்கலாக, சில வங்கிகள்/நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு அலகு அடிப்படையிலான தண்டங்கள் அறவிடப்படுவது தொடர்பில் குறிப்பிட்டிருந்தது. இது தொடர்பில் கன்ரிச் ஃபினான்ஸ் நிறுவனம் விளக்கத்தை வழங்கியுள்ளது.

2006 ஆம் ஆண்டின் இல. 6 நிதியியல் கொடுக்கல் வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சம்மேளனத்தன் தீர்மானங்களின் பிரகாரம் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பில் பதிவுகள் பின்பற்றுவது, நிதியியல் புலனாய்வு பிரிவு விதிமுறைகளின், ஒழுங்குபடுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களின் பிரகாரம் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கான (வாடிக்கையாளர் மீதான கண்காணிப்பு) விதிமுறைகளை பின்பற்றாமை தொடர்பில் இந்த தண்டம் அறவிடப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் புலனாய்வுப் பிரிவு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒழுங்குபடுத்தல் விதிமுறை மீறப்பட்டுள்ளமை தொடர்பான குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்வதுடன், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சம்மேளன (UNSCR) விதிமுறைகள் தடை நிரலை பதிவேற்றுவது மற்றும் ஆராய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த தண்டம் கன்ரிச் ஃபினான்ஸ் நிறுவனத்தை பாதித்திருந்தது. அவசியமான நிதியியல் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான அவதானிப்புகள் மற்றும் நிதியியல் புலனாய்வு பிரிவு வழிகாட்டல்களை பின்பற்றி இந்த குறைபாடுகள் தற்போது முழுமையாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இலங்கை மத்திய வங்கி/நிதியியல் புலனாய்வு அலகு அடங்கலாக சகல ஒழுங்குபடுத்தல் அமைப்புகளினால் முன்மொழியப்பட்டுள்ள கொள்கைகள், வழிகாட்டல்கள், ஆணைகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றி இயங்குவதற்கு கன்ரிச் ஃபினான்ஸ் லிமிடெட் முழுமையாக தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், சிறந்த கூட்டாண்மை ஆளுகை மற்றும் சிறந்த ஒழுக்க செயற்பாடுகளை இவை ஊக்குவிப்பதால் அவற்றை முழுமையாக பின்பற்றுவதை உறுதி செய்யும். வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களின் ஈடுபாட்டை எப்போதும் பாதுகாப்பதிலும் சமூகப் பொறுப்பான வகையில் நிறுவனம் செயலாற்றுவதுடன், இலங்கையில் உறுதியான நிதியியல் துறையை கட்டியெழுப்புவதற்கு எவ்வேளையிலும் பங்களிப்பு வழங்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .