2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கல்வியில் புரட்சியை ஏற்படுத்த SLT-MOBITEL திட்டம்

S.Sekar   / 2021 ஜூன் 07 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொலைத்தொடர்பாடல் துறையில் தனக்கென தனிநாமத்தைப் படைத்துள்ள SLT-MOBITEL, தேசத்தின் இளைஞர்களை உயர்ந்த ஸ்தானத்துக்கு கொண்டு செல்வதற்கு அவர்களுக்கு வலுச் சேர்ப்பதற்காக கல்வித் துறையில் பிரவேசிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளது. இதன் பிரகாரம், SLT பயிற்சி நிலையம் (SLTTC) நிறுவப்பட்டுள்ளதுடன், நாட்டின் விசேடத்துவம் வாய்ந்த கல்வித் துறையில் உயர்ந்த ஸ்தானத்தை சென்றடைவதற்கு அவசியமான வழிகாட்டல்களை வழங்கும் கல்வியகமாகத் திகழ்கின்றது.

நிறுவனத்தின் ஊழியர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் SLTTC நிறுவப்பட்டதுடன், படிப்படியாக தமது கல்விச் சேவைகளை மேலும் விஸ்தரிப்பதற்கும், இலங்கையின் தொலைத்தொடர்பாடல்துறையில் பிரவேசிக்க எதிர்பார்க்கும் இளைஞர்களுக்கு வலுவூட்டும் வகையிலும் விரிவாக்கப்பட்டிருந்தது. SLT-MOBITEL இன் கல்விப் பிரிவான SLTTC, முதலில் தனது செயற்பாடுகளை பொறியியல் கற்கைகளை வழங்குவதுடன் ஆரம்பித்திருந்ததுடன், படிப்படியாக பட்டப்படிப்பு வரை உயர்வடையக்கூடிய வசதிகளை வழங்குகின்றது. இதுவரையில், தாம் வழங்கும் கற்கைகளை பன்முகப்படுத்த இந்த பயிற்சி நிலையம் எதிர்பார்ப்பதுடன், தொலைத் தொடர்பாடல் துறையில் தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள எதிர்பார்ப்போருக்கு பரந்தளவு கற்கைகளை வழங்குவதாகவும் அமைந்துள்ளது.

SLTTC இனால் வழங்கப்படும் பல அனுகூலங்களில், உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகமான ஐக்கிய இராஜ்ஜியத்தின் University of Hertfordshire உடன் இணைந்து இலத்திரனியல் மற்றும் மின் பொறியியலில், இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் பொறியியல், இலத்திரனியல் மற்றும் கணனி பொறியியல் போன்றவற்றில் B.Eng. Hons பட்டப்படிப்பு வழங்கப்படுவதுடன், உலகின் சிறந்த பல்கலைக்கழங்கள் வரிசையில் உயர்ந்த ஸ்தானத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஐக்கிய இராஜ்ஜியத்தின் Pearson BTEC இன் கணனியியல் மற்றும் இலத்திரனியல் மற்றும் மின் பொறியியலில் உயர் தேசிய டிப்ளோமா கற்கைகளையும் வழங்குகின்றது.

ஆர்வமுள்ள மாணவர்கள் Certificate in Applied Information Technology (CAIT), Advanced Certificate in Contact Centre Profession (CCP), Data Communication (CCNA), Optical Fibre, Power & AC, Transmission மற்றும் Telecommunication Technician NVQ Level 3/4 ஆகிய கற்கைகளை தெரிவு செய்து கொள்ளலாம். இலங்கை மாணவர்களுக்கு, இலகுவாக தமது சொந்த நாட்டில் இருந்தவாறே, குறைந்த கட்டணத்தில் உலகத் தரம் வாய்ந்த கல்வியை தொடர முடியும். உதாரணமாக, ஐக்கிய இராஜ்ஜியத்தில் மூன்றாண்டு காலம் பயில்வது என்பது, சுமார் 70 இலட்சம் ரூபாய் வரை வகுப்புக் கட்டணங்களை செலுத்த வேண்யதாக இருக்கும். மாறாக, அதே தகைமையை, இலங்கையின் SLTTC இல் 16 இலட்சம் ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம்.

தமது கற்கையை வெற்றிகரமாக பூர்த்தி செய்த பின்னர், மாணவர்களுக்கு IET அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். தமது B.Eng பட்டத்தை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு, ஐக்கிய இராஜ்ஜியம், ஐக்கிய அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வழங்கப்படும் MSc அல்லது MBA கற்கைக்கு தம்மை இணைத்துக் கொள்ள முடியும். ஐக்கிய இராஜ்ஜிய கற்கையை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு, ஐக்கிய இராஜ்ஜியத்தில் இரண்டு வருடங்களுக்கு வேலை வாய்ப்பு அனுமதியும் கிடைக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .