S.Sekar / 2021 பெப்ரவரி 24 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுத்துறை தொழிற்பேட்டையை விஸ்தரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும் புதிய முதலீட்டாளர்களை உள்வாங்கும் வகையில் 1.9 ஹெக்டெயார் பரப்பளவினால் இந்தப் பகுதியை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
50 ஏக்கர் தொழிற்பேட்டை பகுதியை மேலும் 1.9 ஹெக்டெயரினால் விஸ்தரிப்பது தொடர்பில் தொழிற்துறை அமைச்சர் விமல் வீரவன்சவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார். களுத்துறை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த ஃபுல்லர்டன் எஸ்டேட் எனப்படும் இந்த வலயத்தில் 33 முதலீட்டாளர்கள் வணிக செயற்பாடுகளை முன்னெடுத்த வண்ணமுள்ளனர். 837 மில்லியன் ரூபாயை முதலீடு செய்துள்ளதுடன், 775 தொழில் வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேல் மாகாணத்தில் காணப்படும் எட்டு முதலீட்டு வலயங்களில் புதிய முதலீட்டாளர்களுக்கு செயற்பாடுகளை ஆரம்பிக்க அனுமதி வழங்க போதியளவு இடவசதி இல்லை. எனவே, களுத்துறை தொழிற்பேட்டை வலயத்தை விரிவாக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது என அமைச்சரவைப் பேச்சாளர் ரம்புக்வெல்ல மேலும் குறிப்பிட்டார்.
5 minute ago
8 minute ago
18 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
18 minute ago
20 minute ago