2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

குளோபல் பிசினஸ் அவுட்லுக்கினால் கொமர்ஷல் வங்கி கௌரவிப்பு

Freelancer   / 2024 ஜனவரி 15 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கி 2023 இல் இலங்கையில் ‘சிறந்த SME வங்கி’ மற்றும் ‘மிகவும் புத்தாக்க டிஜிட்டல் வங்கி’ எனத் தெரிவுசெய்யப்பட்டிருந்தது.

வணிக உலகில் முக்கியமான நிகழ்வுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்த UK- ஐ தளமாகக் கொண்ட முன்னணி தகவல் வழங்குநரான குளோபல் பிசினஸ் அவுட்லுக் (GBO) மூலம் சமீபத்திய பாராட்டுகள் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளன. குளோபல் பிசினஸ் அவுட்லுக்கால் கொமர்ஷல் வங்கி கௌரவிக்கப்படுவது இது ஐந்தாவது சந்தர்ப்பமாகும்.

சிறந்த SME வங்கி விருது, SME களை அடையாளம் காணவும், மதிப்பீடு செய்யவும், ஆதரிக்கவும் மற்றும் கண்காணிக்கவும் டிஜிட்டல் முயற்சிகள் உட்பட இலங்கையில் SME துறைக்கு கடன் வழங்குவதில் கொமர்ஷல் வங்கி அளித்துள்ள சிறப்பு முக்கியத்துவம் மற்றும் வங்கியின் அந்தஸ்து என்பவற்றோடு மிகப்பெரிய கடன் வழங்கல்களையும் அங்கீகரிக்கிறது.

வங்கியானது அதன் SME வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து பல நிலைகளில் ஈடுபடுகிறது, அறிவு மற்றும் திறனை வளர்க்க உதவுகிறது மற்றும் உள்ளூர், சர்வதேச சந்தைகளுக்கு நெட்வொர்க்கிங் மற்றும் அணுகலை எளிதாக்குகிறது.

மிகவும் புதுமையான டிஜிட்டல் வங்கிக்கான விருது, அதன் பயன்பாடு மற்றும் அம்சங்கள், வங்கியின் பிரபலமான மொபைல் மற்றும் சமூக ஊடக வங்கி பயன்பாடுகள் மற்றும் டிஜிட்டல் கொடுப்பனவுகளில் அதன் தலைமை மற்றும் வங்கியின் பங்கு ஆகியவற்றின் அடிப்படையில் அதன் டிஜிட்டல் வங்கி தளத்தின் மூலம் வங்கி அடைந்த டிஜிட்டல் தலைமையை அங்கீகரிக்கிறமை குறிப்பிடத்தக்கது.

கொமர்ஷல் வங்கி இலங்கையின் மிகப் பெரிய தனியார் துறை வங்கி மற்றும் உலகின் சிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட முதல் இலங்கை வங்கியாகும். கொமர்ஷல் வங்கி வலையமைப்பினைக் கொண்ட 271 கிளைகள் மற்றும் 964 தானியங்கி இயந்திரங்களை கொண்டு இயங்குகின்றது. கொமர்ஷல் வங்கி இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் துறைக்கு பாரிய கடனுதவி வழங்குவதோடு நாட்டின் வங்கித் துறையில் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளது. வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் பங்களாதேஷை உள்ளடக்கியது, அங்கு வங்கி 20 கிளைகளை இயக்குகின்றது: மியன்மார் நய் பியி தாவில் நுண்நிதி நிறுவனத்தினை கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X