Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2022 ஜூன் 17 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு நிதியியல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் நவலோக ஹொஸ்பிட்டல்ஸ் ஆகியன இணைந்து, புதிதாக பிறந்த குழந்தைகளின் எதிர்காலத்துக்கு திட்டமிடக்கூடிய காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன. கல்வி நிதியத்தைக் கட்டியெழுப்புவது, பரந்தளவு ஆரோக்கிய பராமரிப்பு செலவுகளுக்கான காப்பீடு மற்றும் முக்கியமாக எந்த சந்தர்ப்பத்திலும் குழந்தைகளின் கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் கலந்துவிடாமல் பாதுகாக்கும் நிதி பாதுகாப்பு வலை போன்றன இதில் அடங்கியுள்ளன.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “புதிய பெற்றோருக்கு இந்தத் திட்டம் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த உறுதியற்ற காலப்பகுதியில், இலங்கையின் சிறுவர்களை பாதுகாப்பதற்கு புதிய வழிமுறைகளுக்கு முக்கியத்துவமளித்து அவற்றை செயற்படுத்துகின்றோம். பெற்றோருக்கு முன்கூட்டியே திட்டமிடுவதற்கு இந்தப் பங்காண்மை உதவியாக அமைந்திருப்பதுடன், சிறுவர்களின் எதிர்காலம் பாதுகாப்பாக அமைந்துள்ளது என்பதை அறிந்து நிம்மதியாகத் திகழலாம்.” என்றார்.
கோம்ஸ் தொடர்ந்து குறிப்பிடுகையில், “புதிய தலைமுறையை பாதுகாப்பதில் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய நோக்கம் அதிகளவு கரிசனை கொண்டுள்ளது. ஆரோக்கிய, கல்வி மற்றும் நிதிப் பாதுகாப்பு போன்றவற்றில் புத்தாக்கமான பாதுகாப்பு அடிப்படையிலான தீர்வுகள், இலங்கையர்களின் கனவுகளுக்கு வலுச்சேர்ப்பதில் நீண்ட தூரம் பயணிப்பதாக அமைந்திருக்கும்.” என்றார்.
இந்தப் பங்காண்மை தொடர்பாக யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மைகள் பிரிவின் தலைமை அதிகாரி லுசிலி டயஸ் கருத்துத் தெரிவிக்கையில், “சிறந்த ஆரோக்கியப் பராமரிப்பு சேவைகள் வழங்குநரான நவலோக ஹொஸ்பிட்டல்ஸ் உடன் எமது பங்காண்மை என்பது புதிய பெற்றோருக்கு பாதுகாப்பான சேமிப்பை பெற்றுக் கொடுக்கும் புதிய திட்டமாக அமைந்துள்ளது. இந்தப் பெற்றோருக்கு தமது பிள்ளைகளின் எதிர்காலத்துக்கான சேமிப்பு பயணத்தை பிறந்தவுடனேயே ஆரம்பிக்கும் அனுகூலத்தைக் கொண்டிருப்பார்கள். முக்கியமாக, முதல் தவணைக் கட்டணத்திலிருந்து சொத்தை நீங்கள் உருவாக்குவதுடன், வேறெந்தவொரு நிதி ஆவணத்திலிருந்தும் கிடைக்காத ஒரு பயனாக இது அமைந்துள்ளது.” என்றார்.
நவலோக வைத்தியசாலையில் பிரசவத்துக்கான சேவைகளைப் பெற்று, புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு பாதுகாப்பை பெற்றுக் கொள்வதற்கு தகைமையளிக்கும் வவுச்சரை பெற்றுக் கொள்ளலாம். கல்வி நிதியம், வக்சீன்கள் மற்றும் மருத்துவ பரிசோதகளுக்கான காப்பீடு மற்றும் இதர ஆரோக்கிய அனுகூலங்கள் மற்றும் நிதித் திட்டமிடலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிடிய உறுதியற்ற தன்மைகளிலிருந்து பாதுகாப்பளிக்கும் அம்சங்கள் போன்றன இந்தத் தீர்வுகளில் அடங்கியுள்ளன.
நவலோக ஹொஸ்பிட்டல்ஸ் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி ரசிக திலகரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களுக்கு புதிய மற்றும் அர்த்தமுள்ள வழிகளில் வழங்கும் பெறுமதியை மேம்படுத்திக் கொள்ள முடிவதால், யூனியன் அஷ்யூரன்ஸ் உடனான இந்தப் பங்காண்மை தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கையின் நுகர்வோருக்கு உயர்தர சேவைகளை வழங்குவதில் இரு நிறுவனங்களும் நீண்ட கால வரலாற்றைக் கொண்டுள்ளன. எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அனுகூலங்கள் மற்றும் பெறுமதி தொடர்பான பயணத்தில் இணைந்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.” என்றார்.
இலங்கையின் தனியார் ஆரோக்கிய பராமரிப்புத் துறையில் முன்னணி சேவை வழங்குநராக நவலோக ஹொஸ்பிட்டல்ஸ் திகழ்கின்றது. நவீன, உயர் நோயாளர் பராமரிப்பு மற்றும் மருத்துவ சேவைகளை சர்வதேச தரங்களுக்கமைய வழங்குகின்றமைக்காக புகழ்பெற்றுள்ளது.
கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 17.9 பில்லியனைக் கொண்டுள்ளது. ஆயுள் நிதியமாக ரூ. 49.7 பில்லியனையும், 2022 மார்ச் மாதமளவில் முதலீட்டு இலாகாவாக ரூ. 58.8 பில்லியனைக் கொண்டிருந்தது.
இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், பல வருடங்களாக தொடர்ச்சியாக Great Place to Work© இனால் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனமாக தரப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளதுடன், இலங்கையில் மில்லியன் டொலர் வட்ட மேசையில் (MDRT) முதல்தரத்தில் திகழ்கின்றது.
படம் – இடமிருந்து: ட்ரெவின் அல்மேதா - யூனியன் அஷ்யூரன்ஸ், ரசிக திலகரட்ன – நவலோக ஹொஸ்பிட்டல்ஸ் கூட்டாண்மை உறவுகள் தலைமை அதிகாரி, கலாநிதி. ஜயந்த தர்மதாச – நவலோக ஹொஸ்பிட்டல்ஸ் தவிசாளர், ஜுட் கோம்ஸ் – யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி, லுசிலி டயஸ் – யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மைகள் தலைமை அதிகாரி, ரஞ்சுள ஜயதிலக - யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மைகள் முகாமையாளர்.
19 minute ago
31 minute ago
40 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
31 minute ago
40 minute ago
56 minute ago