2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

கொமர்ஷல் வங்கிக்கு ஆறு விருதுகள் வழங்கி கௌரவிப்பு

Freelancer   / 2023 ஜூலை 28 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கிக்கு இந்திய வர்த்தக சபை - The Indian Chamber of Commerce (ICC) அண்மையில் ஆறு கீர்த்திமிக்க விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது. இவற்றுள் இரண்டு இலங்கைக்கானதும் ஏனைய நான்கும் வங்கியின் பங்களாதேஷ் செயற்பாடுகளுக்கு உரியதுமாகும். கொமர்ஷல் வங்கிக்கு இவ்வாண்டில் ஏற்கனவே விருதுகள் பல வழங்கி கௌரவித்துள்ள சர்வதேச அமைப்புக்களுடன் இப்போது இந்திய வர்த்தக சபையும் இணைந்துள்ளது.

இந்திய வர்த்தக சபை இலங்கையின் மிகச் சிறந்த வங்கியாக கொமர்ஷல் வங்கியை அங்கீகரித்துள்ளது. அத்துடன் இலங்கையிலுள்ள வங்கிகள் மத்தியில் 'இடர் முகாமைத்துவ சிறந்த செயற்பாடு' என்பதற்குரிய சிறந்த வங்கியாகவும் கொமர்ஷல் வங்கியை அங்கீகரித்துள்ளது. அத்தோடு பங்களாதேஷின் கொமர்ஷல் வங்கிக்கு 'சொத்து தரத்தில் சிறந்த செயற்பாடு' 'வளர்ச்சியில் சிறந்த செயற்பாடு' 'இடர் முகாமைத்துவத்தில் சிறந்த செயற்பாடு' மற்றும் 'இலாபமீட்டலில் சிறந்த செயற்பாடு' என்பனவற்றுக்கான விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இம்மாதம் இந்தியாவின் கோவாவில் இடம்பெற்ற ICC இன் வளர்ந்துவரும் ஆசிய வங்கிகளின் மாநாடு மற்றும் விருது வழங்கல் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

இந்திய வர்த்தக சபையிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ள இந்த விருதுகள் குறித்து கருத்து வெளியிட்ட கொமர்ஷல் வங்கியின் பிரதான செயற்பாட்டு அதிகாரி எஸ். பிரபாகர் “BIMSTEC நாடுகள் மத்தியில் வங்கி எதிர்நோக்கிய சவால்கள் அதேபோல் வாடிக்கையாளர்கள் மற்றும் ஒழுங்கமைப்பாளர்களின் எதிர்ப்பார்ப்புகள் என்பன பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே இருந்தன. பிராந்தியத்தில் உள்ள வங்கித்துறை சார்ந்த கீர்த்திமிக்க தனிநபர் குழுவொன்றால் மதிப்பீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளதால் இவை குறிப்பிடத்தக்க பெறுமதியைக் கொண்டுள்ளன. இலங்கையில் சிறந்த வங்கிக்கான விருதை வெல்லக் கிடைத்துள்ளமை எமக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கின்றது. அத்தோடு இலங்கையிலும் பங்களாதேஷிலும் எமது செயற்பாடுகளுக்காக மேலும் ஐந்து விருதுகள் கிடைத்துள்ளமையும் எம்மை மிகவும் மகிழ்ச்சிக்கு ஆளாக்கி உள்ளன' என்றார்.

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் நோய்ப் பரவல் காலகட்டத்திலும், அதற்கு பிந்திய காலகட்டத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட யுத்த சூழலிலும் நிதிக் கொள்கையை வளர்ச்சிக்கான ஒரு இயந்திரமாகப் பயன்படுத்தியமை என்பனவற்றில் வங்கி ஆற்றிய நட்சத்திர தரத்திலான பங்களிப்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தனது செயற்பாடுகளில் வங்கி சந்தித்த எண்ணற்ற சவால்களை சமாளிப்பதற்கு வங்கி பின்பற்றிய சிறப்பான மற்றும் புத்தாக்க வழிமுறைகளும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. கொடுப்பனவு முறைகளில் புத்தாக்க கண்டு பிடிப்புகள், டிஜிட்டல் சொத்து முகாமைத்துவம், நாணய சலவைக்கு எதிரான செயற்பாடுகள், பெரிய அளவிலான தரவு பகுப்பாய்வுகள், இணையவழி இணக்கப்பாடுகள், ஒழுங்கமைப்பு இணக்கப்பாடுகள், நிதி ஆரோக்கியம் மற்றும் வாடிக்கையாளர் பிரிவுக்கான வழிகாட்டல்கள் என்பனவும் விருதுக்காக கவனம் செலுத்தப்பட்ட ஏனைய அம்சங்களாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X