2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொமர்ஷல் வங்கியின் ePassbook பன்மொழி பயன்பாட்டில்

S.Sekar   / 2022 ஜூலை 15 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘ComBank ePassbook’ டிஜிட்டல் வங்கிப்பழக்கத்தை மேலும் ஊக்குவிப்பதற்காகவும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காகவும் ஆங்கிலத்திற்கு மேலதிகமாக சிங்களம் மற்றும் தமிழிலும் இப்போது பயன்பாட்டிலுள்ளது என கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது.

ComBank ePassbook செயலியானது இப்பொழுது அனைத்து தங்கள் வங்கிப் பரிவர்த்தனைகளைப் பார்ப்பதற்கு அணுகுவதற்கும் கொமர்ஷல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும் உதவுகிறது.

வங்கியின் அனைத்து வாடிக்கையாளர் பிரிவுகளையும் டிஜிட்டல் மயமாக்குவதற்கும் டிஜிட்டல் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கும் ComBank ePassbook ஐ மும்மொழியாக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வங்கி தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில், ComBank ePassbook ஆனது சுய-பதிவு திறன்கள், நிகழ்நேர பரிவர்த்தனை அறிவிப்புகள் மற்றும் பயோமெட்ரிக் உள்நுழைவு அம்சத்தை உள்ளடக்கியதாக மேம்படுத்தப்பட்டது, இது கணக்கு வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு உள்நுழைவிலும் கடவுச்சொல்லை உள்ளிடாமல், முக அடையாளம் மற்றும் கைரேகை மூலம் செயலிபை பயன்படுத்தவும் உதவும். சுய-பதிவு அம்சத்தை அறிமுகப்படுத்திய ஆறு மாதங்களுக்குள் ComBank ePassbook பதிவிறக்கம் 150,000 அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ComBank ePassbook 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பயனர்களைக் கொண்டுள்ளது, சராசரியாக 30 நிமிடங்களுக்கு 10,000 க்கும் மேற்பட்ட பயன்பாட்டிலுள்ள பயனர்கள் மற்றும் 1 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர் பதிவுகளைக் கொண்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.

இந்த மொபைல் செயலி, Android மற்றும் iOS இயங்கும் மொபைல் சாதனங்களில் சேமிப்பு, நடப்பு, NRFC, RFC கணக்குகள் மற்றும் கிரெடிட் கார்டுகளின் விபரங்களுக்கு அணுகலை வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு கணக்கையும் தனித்தனியாக பார்க்கும் திறனுடன், கணக்கு வைத்திருப்பவரால் பதிவுசெய்யப்பட்ட பல கணக்குகளுக்கு ஒரே களஞ்சியமாக செயல்படுகிறது. ComBank ePassbook iOS மொபைல் பயன்பாடு, சமீபத்திய மேக்புக்களிலும் டெஸ்க்டாப் பயன்பாடாக இயங்கக்கூடியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .