Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஜூன் 15 , மு.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கியின் டெபிட் கார்ட் பாவனையாளர்கள் அடுத்த மூன்று மாத காலத்தில் திகைப்பூட்டும் வகையில் ஆறு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்பைப் பெறுவார்கள். இம்மாதம் முதலாம் திகதி முதல் வங்கி அறிமுகம் செய்துள்ள ‘அதிகம் செலவிட்டு அதிகம் வெல்லுங்கள்’ எனும் ஊக்குவிப்புத் திட்டம் மூலம், இந்தப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
2018 ஜூன், ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் கொமர்ஷல் வங்கியின் டெபிட் கார்ட்டைப் பாவித்து, ஒரு மாத காலத்தில் 15,000 ரூபாய்க்கும் அதிகமான தொகையில் பொருட்களைக் கொள்வனவு செய்பவர்கள், இந்தத் திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படுவர். சீட்டிழுப்பு மாதாந்தம் 16 பேருக்கு, அதாவது மொத்தம் 48 பேருக்கு வெகுமதிகள் வழங்கப்படும்.
டெபிட் கார்ட் பாவனையாளர் ஒருவருக்கு மிகப் பெரிய பரிசாக Apple MacBook Pro - 15”, Intel Core i7 மடிக்கணினி மாதாந்தம் வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் இரண்டு பேருக்கு இரண்டாவது பரிசாக 55” Samsung Curved Smart LED தொலைக்காட்சிகள் வழங்கப்படும். மூன்று பேருக்கு மூன்றாவது பரிசாக Samsung 321L Double Door குளிர்ச்சாதனப் பெட்டிகள் வழங்கப்படும். இவை தவிர மாதாந்தம் பத்து ஆறுதல் பரிசுகளாக LG 12Kg Smart Inverter சலவை இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளன.
“பல டெபிட் கார்ட் பாவனையாளர்கள், தமது டெபிட் கார்ட்டுகளை ATM இயந்திரத்தில் இருந்து பணத்தை மீளப் பெற மட்டுமே பாவிக்கின்றனர். கொம்பேங்க் டெபிட் கார்ட் மூலம் இன்னும் நிறைய விடயங்களைச் செய்யலாம் என்பதை அவர்கள் உணராமல் உள்ளனர். டெபிட் கார்ட் பாவனையாளர்களை ஊக்குவிக்கும் வகையிலேயே இந்தப் பரிசுத் திட்டம் அறிமுகம் செய்யப்படுகின்றது. இத்தகைய விடயங்களை உணரவைக்கும் ஒரு முயற்சியே இது” என வங்கியின் கார்ட் பிரிவுத் தலைவர் துஷித சுரவீர தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
20 May 2025
20 May 2025