Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மே 30 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கியுடன் கைகோர்த்து, அதன் டிஜிட்டல் கணக்கான Flash இன் உத்தியோகபூர்வ காப்புறுதி பங்காளராகச் செயலாற்ற Fairfirst இன்சூரன்ஸ் முன்வந்துள்ளது.
நிதிச் சேவைகள் மற்றும் நிதி நலம் ஆகியவற்றில் டிஜிட்டல் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கான சிறந்த தீர்வாக வடிவமைக்கப்பட்டுள்ள கொமர்ஷல் வங்கியின் Flash கணக்கினூடாக அதன் வாடிக்கையாளர்களுக்கு எப்பகுதியிலிருந்தாலும் ஒப்பற்ற வங்கியியல் அனுபவத்தை பெற்றுக் கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட காப்புறுதிச் சேவைகளை வழங்குவதில் முன்னோடியாக திகழும் Fairfirst, ஒவ்வொரு app பதிவிறக்கத்தின் போதும் நாள் அடிப்படையிலான சுகாதார காப்புறுதி சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக காப்புறுதி பங்காளராக செயற்படும்.
சுகயீனம் அல்லது விபத்துக் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட நேரிட்டால் இந்த காப்பீட்டினூடாக ஒரு மாத காலப் பகுதிக்கு இலவசமாக வழங்கப்படும். எதிர்காலத்தில் Flash பாவனையாளர்களுக்கு தமது வாழ்க்கை முறைக்கு பொருத்தமான காப்புறுதி தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்கான முழு வசதியையும் Fairfirst வழங்கும்.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடல் தொடர்பில் Fairfirst இன்சூரன்ஸின் முகாமைத்துவ பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி. சஞ்ஜீவ் ஜா கருத்துத் தெரிவிக்கையில், “கொமர்ஷல் வங்கி அறிமுகம் செய்துள்ள டிஜிட்டல் வங்கி கணக்கான Flash உடன் நாமும் இணைந்துள்ளதையிட்டு மிகவும் பெருமை கொள்கிறோம். Fairfirst ஐச் சேர்ந்த நாம் எமது காப்புறுதிதாரர்கள் மற்றும் வியாபார பங்காளர்களுடன் இணைந்து மக்களுக்கு பொருத்தமான காப்புறுதியை வழங்குவது குறித்து தொடர்ச்சியாக கவனம் செலுத்துவதுடன், அவ்வாறு மேற்கொள்ளும் பல நடவடிக்கைகளில் ஒன்றாக இது அமைந்துள்ளது” என்றார்.
15 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
2 hours ago