Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூன் 03 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
Facebook மற்றும் டிஜிட்டல் தயாரிப்பு அபிவிருத்தி நிறுவனமான Arimac Digital இன் ஆதரவுடன், இலங்கை சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தால் தானியங்கி Messenger அனுபவம் ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.
இந்த அறிமுகத்தின் முக்கிய நோக்கம், இலங்கை மக்களுக்கு கொவிட் - 19 தொடர்பான, பிந்திய தகவல்கள் வழங்கப்படுவதை உறுதி செய்வதும், தற்போதைய சுகாதார நிலைமைகள் தொடர்பான சரியான தகவல்கள் மக்களுக்குக் கிடைக்கச் செய்வதும் அவற்றின் ஊடாக மக்களுக்கு உதவுவதுமே ஆகும். இந்தத் தானியங்கி அனுபவமானது, கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, ஒரு வைத்தியரைப் பார்க்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கவும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பாகச் சரியான தகவல்களைப் பெறவும் கொரோனா வைரஸ் தொடர்பான வழிகாட்டல்கள், தனிமைப்படுத்துதல், எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்கான, சமீபத்திய புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெறவும் மக்களுக்கு உதவுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
48 minute ago