2026 ஜனவரி 28, புதன்கிழமை

கொரோனாவைக் கட்டுப்படுத்த போராடும் வைத்தியசாலைகளுக்கு உதவி

Gavitha   / 2020 டிசெம்பர் 16 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொற்றுப் பரவல் காணப்படும் சூழலில், சமூகங்களுக்கு உதவிகளை வழங்குவது, மக்களின் சுகாதாரத்தையும் தூய்மையையும் பாதுகாத்து அவர்களின் நலனை மேம்படுத்துவது என்பது ஹேமாஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமைந்துள்ளது. 

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தொற்றுப் பரவல் காரணமாக அதிகளவு சவால்கள் நிறைந்த சூழ்நிலைக்கு முகங்கொடுத்துள்ளதன் காரணமாக, இந்தப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வைத்தியசாலைகளில் பணியாற்றும் சுகாதாரப் பிரிவினர் மற்றும் நோயாளர்களுக்கு உதவிகளை வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தை ஹேமாஸ் உணர்ந்துள்ளது.

கொரோனாவைரசுக்கு எதிரான போராட்டத்தில் கைகோர்த்து, புதிதாக அறிமுகம் செய்திருந்த தீவா பவர் ஜேர்ம் கார்ட் சலவை பவுடரை, கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலை, முல்லேரியாவ மற்றும் ஹோமகம ஆதார வைத்தியசாலை ஆகியன அடங்கலாக பல்வேறு வைத்தியசாலைகளுக்கு வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் இந்த இரு வைத்தியசாலைகளும், தற்போது தீவா ஜேர்ம் கார்ட் டிடர்ஜன்ட் பவுடரை பயன்படுத்தி, தமது சலவை தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளக்கூடிய உதவியைப் பெற்றுள்ளன.

ஹோமகம ஆதார வைத்தியசாலையின் மருத்துவ கண்காணிப்பாளர் வைத்தியர். ஜனித் ஹெட்டியாரச்சி மற்றும் முல்லேரியாவ, கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் (திருமதி) முதித பெரேரா தமது வைத்தியசாலைகள் சார்பாக இந்த நன்கொடைகளைப் பெற்றுக் கொண்டனர்.

நிறுவனத்தின் முன்னணி சலவைத் தயாரிப்புகள் வர்த்தக நாமமான தீவா, அண்மையில் தனது புதிய “தீவா பவர்” சலவைப் பவுடர் மற்றும் திரவத் தெரிவுகளான – தீவா பவர் ஜேர்ம் கார்ட் மற்றும் தீவா பவர் கலர் கார்ட் ஆகியவற்றை அறிமுகம் செய்திருந்தது.

குடும்பத்தை தொற்றுக் கிருமிகளிலிருந்து பாதுகாக்கும் ஒரு பாதுகாப்பு அரணாக தீவா பவர் ஜேர்ம் கார்ட் பவுடர் மற்றும் திரவத் தெரிவுகள் அமைந்திருப்பதுடன், ஆடைகளில் காணப்படும் 99.9% ஆன கிருமிகளை அழிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதுடன், ஆடைகளை நன்கு தொற்று நீக்கம் செய்யும் வகையில் அமைந்துள்ளது.

கிருமிகளை அழிக்கும் ஆற்றல் படைத்த இயற்கை உள்ளம்சங்களான வேப்பம் சேர்மானம் மற்றும் எலுமிச்சை கொண்டு தீவா ஜேர்ம் கார்ட் தயாரிக்கப்பட்டுள்ளது.  புத்துணர்வூட்டும் நீண்ட காலம் நிலைத்திருக்கும் நறுமணத்தை இந்த தயாரிப்பு வழங்குவதுடன், ஆடைகளை நன்கு தூய்மையாக்குகின்றது.

இல்லப் பராமரிப்பு தெரிவுகளுக்கான சிரேஷ்ட வர்த்தக நாம முகாமையாளர் அனுஷ்கா சபாநாயகம் கருத்துத் தெரிவிக்கையில், “தொற்றுப் பரவலுடன், நுகர்வோர் தமது ஆடைகளைக் கழுவும் முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்நிலையில் எமது குடும்பத்தாரை கிருமிகளிலிருந்து பாதுகாப்பது எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஞாபகமூட்டியுள்ளது. தீவா பவர் ஜேர்ம் கார்ட் தெரிவுகளின் அறிமுகமானது, நுகர்வோருக்கு தமது குடும்பத்தை தொற்றுப் பரவலிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பை உறுதி செய்துள்ளது. புதிய தீவா பவர் தெரிவுகள், வினைத்திறன் வாய்ந்த மற்றும் ஆற்றல் மிகுந்த சலவைத் தெரிவுகளாக அமைந்திருப்பது மாத்திரமன்றி, அவர்களின் தேவைகளுக்கு உகந்த வகையில் சலவை அனுபவத்தை வழங்குவதாகவும் அமைந்துள்ளது.” என்றார்.

கடினமான, காலத்தை விரயமாக்கும் சலவை அனுபவத்திலிருந்து, சௌகரியமான அனுபவமாக மாற்றியமைக்கும் வகையில் தீவா பவர் திரவ டிடர்ஜன்ட் தெரிவுகள் அமைந்துள்ளன.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தயாரிப்புகள் கைகளால் ஆடைகளைக் கழுவவும், சலவை இயந்திரங்களில் ஆடைகளைக் கழுவ உகந்ததாக அமைந்துள்ளன. சலவைப் பராமரிப்பு தெரிவுகளில், refill pouchகளை இலங்கையில் முதன் முறையாக அறிமுகம் செய்த நாமமாகவும் தீவா திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X