2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொள்ளுப்பிட்டியில் Multilac, Macktiles நவீன காட்சியறைகள் திறப்பு

S.Sekar   / 2022 மே 30 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

Multilac மற்றும் Macktiles தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தனது புதிய காட்சியறையை கொள்ளுப்பிட்டியில் திறந்து வைத்துள்ளது.

இந்த இரண்டு பெருமைக்குரிய இலங்கையின் உள்நாட்டு வர்த்தகநாமங்களும் பல தசாப்தங்களாக நம் நாட்டில் வீடுகளை அலங்கரித்து வந்துள்ளன. உங்கள் சுவர்கள் மற்றும் தரைகளுக்கு நேர்த்தியான தீர்வைக் கண்டறிய, புதிய காட்சியறைக்கு வருகை தருமாறு அனைவருக்கும் மெக்சன்ஸ் குழுமம் அன்புடன் அழைப்பு விடுப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. புதிய காட்சியறை இல. 12, சீ வியு அவெனியு, கொழும்பு 03 என்ற முகவரியில் அமைந்துள்ளது.

புதிய காட்சியறையானது வாடிக்கையாளர்கள், பொது ஒப்பந்ததாரர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள் மல்டிலாக் தீந்தைகள் மற்றும் மெக்டைல்ஸ் தரையோடுகளின் அழகு, நடைமுறை உபயோகம் மற்றும் மதிப்பு ஆகியவற்றைக் கண்டறிய உதவும் வகையில் மூலோபாயரீதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வரிசையையும் கொண்டிருக்கும் என்பதுடன், புத்தாக்கமான தீந்தை தீர்வுகளையும் கொண்டுள்ளது. வாகனங்களுக்கான தீந்தைகள், மர வேலைப்பாடுகளைப் பேணிப் பராமரிக்கும் தீந்தை வகைகள் மற்றும் வானிலையிலிருந்து பாதுகாக்கும் வண்ணப்பூச்சுகளையும் இது உள்ளடக்கியுள்ளது.

மெக்சன்ஸ் தயாரிப்பு வரிசையானது அனைத்து வகையான வாடிக்கையாளர்களின் வரவுசெலவுத் திட்டங்களுக்கும் அமைவாக உயர் தர தரையோடுகளை வழங்க வேண்டும் என்ற மெக்டைல்ஸ் கோட்பாட்டுடன் ஒத்திசைகின்றது. தற்போது உள்ளூர் சந்தையில் தரையோடுகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், உற்பத்தியின் அளவை அதிகரிக்க மெக்டைல்ஸ் நிறுவனம் தனது முழு முயற்சிகளையும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது.

Multilac, இலங்கையில் வர்ணப்பூச்சுகள் ஏற்றுமதி செய்யும் மிகப் பாரிய நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்றது. மல்டிலாக் தனது 40 வருட வரலாற்றில் இலங்கையில் தீந்தைகள் மற்றும் மேற்பரப்பு பூச்சுகள் துறையில் உச்சத்தை எட்டியுள்ளதுடன், எண்ணற்ற விருதுகளையும் வென்றுள்ளது. சமீபத்தில் மல்டிலாக் ஆனது தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளன விருதுகள் 2021 நிகழ்வில் பல விருதுகளை வென்றுள்ளது. பாரிய பிரிவில் தங்க விருது மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவில் சிறந்த செயல்பாட்டாளருக்கான விருது ஆகிய விருதுகள் அவற்றில் அடங்கியிருந்தன. வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் புத்தாக்கம் மீதான அர்ப்பணிப்புக்காக ஈடிணையற்ற நற்பெயரைச் சம்பாதித்துள்ள மல்டிலாக் தயாரிப்புகள் எந்தவொரு வீட்டிலும் வெகுவாக வரவேற்கப்படும் ஒரு தனித்துவமான நாமமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .