Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 25 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு மாதத்தில் கொழும்பு வாழ் மக்களின் அதிக வரவேற்பைப் பெற்ற ஒரு இடமாக Colombo City Centre மாறியுள்ளது. மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்று இலங்கையின் முன்னணி பொழுதுபோக்கு மற்றும் நவநாகரீக அம்சங்களை உள்ளடக்கிய ஸ்தலமாக Colombo City Centre பிரபல்யமடைந்துள்ளது.
திறந்துவைக்கப்பட்ட நாள் முதல் 250,000 பேருக்கும் அதிகமானவர்கள் Colombo City Centre க்கு வருகைத் தந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பன்முகத்தன்மை வாய்ந்த சர்வதேச உணவகங்களில் வகை வகையான உணவுகளை சுவைத்தும், சர்வதேச தரத்திலான ஷொப்பிங் அனுபவங்கள் மற்றும் சினிமா அனுபவங்களை பெற்றும் Colombo City Centre இல் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் தனது பொழுதை கழித்து மனம் நீங்கா அனுபவங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
Colombo City Centre பிரதம நிறைவேற்று அதிகாரி ஆனந்த் சுந்தரம் கருத்து தெரிவிக்கையில், முதல் மாதத்தின் சகல நடவடிக்கைகளும் மக்களால் அதிக வரவேற்பை பெற்றதோடு, அனைத்து நடவடிக்கைகளும் மிகச்சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டது. சர்வதேச ஷொப்பிங் அனுபவம் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை இலங்கையில் பெற்றுக்கொள்ளக்கூடிய குறைப்பாட்டை Colombo City Centre முழுமையாக்கியுள்ளதோடு, இலங்கைக்கான முதலாவது சர்வதேச கடைத்தொகுதிகள் இதுவென்பதானால் இவ்வாறான மக்கள் வரவேற்பு Colombo City Centreக்கு கிடைத்துள்ளது.
200,000 சதுர அடிகளில் பரந்து விரிந்துள்ள Colombo City Center கடைத்தொகுதிகளில் விரும்பியதை ஷொப்பிங் செய்யவும், வகை வகையான உணவுகளை விருப்பப்படி சுவைத்திடவும் மற்றும் பொழுதை மகிழ்ச்சியாக கழித்திடக்கூடிய பல்வேறு அம்சங்களுடன், சர்வதேச பிராண்டுகளின் காட்சியறைகள் பல இங்கு உள்ளன. கொழும்பு நகரத்துக்குப் புத்தாக்கமான தோற்றத்தையும் கவர்ச்சியையும் வழங்கும் வகையில் பிரம்மாண்டமாக Colombo City Centre உருவாக்கப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி Apple, Body Shop, Swarovski உள்ளிட்ட பல்வேறு பிராண்டுகளுடன் சர்வதேச தரத்திலான பன்முகத் தன்மை வாய்ந்த உணவகங்கள், Dolby Atmos உடன் 4K தொழில்நுட்பத்திலான சினிமா அனுபவங்களுடன் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை இலங்கையர்களுக்கு வழங்கி வருகிறது.
2019 முதல் காலாண்டில் முழுமையாக சகல பணிகளையும் நிறைவுசெய்யப்படவுள்ள Colombo City Centre கூட்டுத் திட்டமானது, முதலீட்டு வாரியத்தின் அனுமதியைப் பெற்றுள்ள இலங்கையின் முதலாவது கூட்டுத்திட்டமாகும். 180 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் உருவாக்கப்பட்டுவரும் இந்த கூட்டுத்திட்டத்தை அபான்ஸ் நிறுவனம் மற்றும் சிங்கப்பூரின் Next Story Group ஆகிய நிறுவனங்கள் கூட்டிணைந்து உருவாக்கியுள்ளன. சமீபத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பிரம்மாண்ட முதலீட்டுத் திட்டமான இது 47 அடுக்கு மாடிகளுடன் கொழும்பின் மையப் பகுதியில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
32 minute ago
39 minute ago