Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜனவரி 02 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாநகர சபை, ஜோன் கீல்ஸ் மய்யம், ஜோன் கீல்ஸ் புரப்பட்டீஸ் நிறுவனங்களுடன் இணைந்து கொழும்பு - 02 இல் புதிய டி மெல் பார்க் சனசமூக நிலையம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
கொழும்பு மாநகர சபையின் மேயர் ரோசி சேனநாயக்கவால் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கருத்திட்டத்துக்கு ஜோன் கீல்ஸ் குழுமத்தின் கூட்டிணைந்த சமூகப் பொறுப்பு நிறுவனமான ஜோன் கீல்ஸ் மய்யம், கூட்டிணைந்த சமூகப் பொறுப்புத்துறையின் பூர்வாங்க முயற்சியான நிர்மாண வேலையை மேற்கொள்ளும் ஜோன் கீல்ஸ் புரப்பட்டீஸ் ஆகியன இணைந்து நிதியளித்துள்ளன.
குழுமத்தின் வியாபார ஸ்தானங்களின் சமூகங்களுக்கிடையில் ஊக்குவிக்கும் நடவடிக்கைகள், நிலைபேறான வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஜோன் கீல்ஸ் பௌண்டேஷனின், சமூக வலுவூட்டல் பூர்வாங்க முயற்சியான ஜோன் கீல்ஸ் ‘பிரஜா சக்தி’ உடன் இக்கருத்திட்டம் இணைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையானது கட்டடத்தைத் திட்டமிடல், செயல்படுத்தல் என்பவற்றில் அதன் முழுமையான பங்களிப்பை நல்கியதுடன், அந்தச் சனசமூக நிலையத்துக்கான தளபாடங்கள், சாதனங்கள் என்பவற்றை வழங்கி, முகாமைத்துவப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது.
இதன் திறப்பு விழாவில், கொழும்பு மேயர், கொழும்பு துணை மேயர், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சட்ட, மனித வள, சி.எஸ்.ஆர் துறைத் தலைவர் டிலானி அழகரட்னம், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் புரொபேர்டிஸ் துறைத் தலைவர் சுரேஷ் ராஜேந்திரா, ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சட்டம், சி.எஸ்.ஆர் துறைத் தலைவர் நாடிஜா தம்பையா, ஜோன் கீல்ஸ் குழுமத்தின் செயற்பாட்டுத் துறைத் தலைவர் கார்மலின் ஜெயசூரியா ஆகியோர் தகடின் திரையினை நீக்கி, சடங்கு நாடாவை வெட்டினர்.
கொழும்பு பிரதேச செயலாளர், கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள், அதிகாரிகள், கொம்பனி வீதி, (ஹனுபிட்டி, வேகத்த கிராம சேவை அலுவலர்கள், ஜே.கே.எப் கூட்டாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள், கொழும்பு - 02 சமூகம் ஆகியோர் தொடக்க விழாவில் பங்கேற்றனர். அதேவேளை, முன்பள்ளி மாணவர்களின் நிகழ்ச்சிகளும் நிகழ்வு சிறப்பாக அமைய வழிவகுத்தன.
கல்வி, வாழ்வாதார மேம்பாட்டு முயற்சிகள், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கொம்பனிவீதி ரயில் நிலையத்தைப் புதுப்பித்தல், பராமரித்தல் உள்ளிட்ட வேலைத்திட்டங்களில் கடந்த 15 ஆண்டுகளாக கொழும்பு - 02 இல் சமூக வலுவூட்டல் முயற்சிகளில் ஜே.கே.எப் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஜோன் கீல்ஸ் குழுமத்தின் கொழும்பு மாநகர சபை, கூட்டாளர் அமைப்புகள், ஜோன் கீல்ஸ் குரூப்பின் நிறுவனங்களுடன் இணைந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற பல சமூக வலுவூட்டல் நடவடிக்கைகளை நடத்த ஜே.கே.எப் திட்டமிட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 May 2025
18 May 2025
18 May 2025