2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

கொழும்பு துறைமுக நகரத்தில் இயங்க கொமர்ஷல் வங்கிக்கு உரிமம்

Freelancer   / 2024 ஜனவரி 05 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கி பிஎல்சிக்கு கொழும்பு துறைமுக நகரமான, துறைமுக நகரில் காணப்படும் சிறப்புப் பொருளாதார வலயத்தில் வெளிநாட்டு வங்கிச் சேவைகளை வழங்குவதற்கான அங்கீகரிக்கப்பட்ட உரிமம் அண்மையில் வழங்கப்பட்டது. நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் பல நாணய சர்வதேச வணிகம் மற்றும் நிதிச் சேவை கேந்திர நிலையமாக இந்த பொருளாதார வலயம் அமைந்துள்ளது.

இந்த AP உரிமம் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவினால் வங்கிக்கு வழங்கப்பட்டது. கொமர்ஷல் வங்கியானது கொழும்பு துறைமுக நகரத்தின் எல்லைக்குள்ளும் வெளியிலும் இயங்குவதற்கு வழி வகுத்துள்ளதுடன் முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவைகளை வழங்குகிறது.

விசேட பொருளாதார வலயத்தில் செயற்படுவதற்கு அங்கீகாரம் பெற்ற முதலாவது வங்கியாக தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி சனத் மனதுங்க கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையில் மத்திய வங்கியினால் நியமிக்கப்பட்டுள்ள உயர் தரம்கொண்ட ஒரே தனியார் துறை வங்கியாக உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வங்கி அல்லது D-SIB வங்கியான கொமர்ஷல் வங்கி கொழும்பு துறைமுக நகரத்தில் பிரசன்னத்தை நிலைநாட்ட எதிர்பார்க்கப்படும் நிறுவனங்களின் நிதித் தேவைகளுக்குச் சிறந்த முறையில் சேவையாற்றுகிறது. பெருநிறுவனங்கள் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு பதிலளிப்பதில் எங்களுக்கு விரிவான அனுபவம் உள்ளது பெருநிறுவன மற்றும் சில்லறை வங்கித் தேவைகளுக்கு சேவை செய்யும் உயர்-மேம்பட்ட உலகத் தரம் வாய்ந்த டிஜிட்டல் வங்கித் தளங்களைக் கொண்டுள்ளோம், மேலும் கொழும்பின் வளர்ச்சியை எளிதாக்குவதில் முக்கிய பங்கை வகிக்க எதிர்பார்த்துள்ளோம்.' என்றார்.

கொமர்ஷல் வங்கி இலங்கை வங்கிகளில் பரந்த சர்வதேச தடயத்தைக் கொண்டுள்ளது. வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் பங்களாதேஷை உள்ளடக்கியது, அங்கு வங்கி 20 கிளைகளை இயக்குகின்றது. மியன்மார் நய் பியி தாவில் நுண்நிதி நிறுவனத்தினை கொண்டுள்ளது, வங்கியின் வெளிநாட்டு செயல்பாடுகள் அதன் இலாபத்தில் கணிசமான பங்களிப்பை வழங்குகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X