S.Sekar / 2021 மே 22 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகளைப் பெறுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் (SLCPI) தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் தடுப்பூசிகளை இறக்குமதி செய்கையில் தமது சம்மேளனத்துடன் பணியாற்றும் பிரதான உலகளாவிய மருந்து உற்பத்தியாளர்களின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அங்கீகாரமுடைய விநியோகஸ்தர்களால் அந்த தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்துவதற்காக அரசு மற்றும் சுகாதாரப் பிரிவினருடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென சம்மேளனம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள உலகிலுள்ள அனைத்து பாரிய நிறுவனங்களுடனும் அங்கத்துவம் வகிக்கும் SLCPI, கொவிட்-19க்காக எந்தவொரு தடுப்பூசியையும் கொள்முதல் செய்கையில் கட்டாயமாக உலகளாவிய உற்பத்தி நிறுவனத்தினால் சந்தை அங்கீகாரம் பெற்ற பதிவு மற்றும் சந்தையில் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தர்களினால் அந்த தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்படுகையில் இராஜதந்திர ரீதியில் இடம் பெறுமெனவும் அதற்காக தொடர்ச்சியான வசதிகளையும் மற்றும் ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாக கூறியுள்ள SLCPI நோயாளியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகையில் அந்த தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் நிறுவனத்தின் நம்பகத்தன்மை மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளது.
பொதுவாக தொற்றுநோய்களின் போது, சட்டவிரோத மற்றும் போலியான தயாரிப்புகள் சந்தைகளுக்கு வருகின்றன, “தடுப்பூசிகளின் உற்பத்தியில் இருந்து அதன் பயன்பாடு வரையுள்ள நடவடிக்கைகளுக்கு பொருந்தாத மற்றும் ஏனைய மருந்து பொருட்கள் தொடர்பான ஒழுங்குமுறைகள் உறுதிப்படுத்தாமை சட்டவிரோத வர்த்தகர்கள் மற்றும் போலி விநியோகஸ்தர்களிடமிருந்து அவ்வாறான உற்பத்திகள் பெற்றுக் கொள்ளப்படவில்லையென உறுதிப்படுத்துவதற்காக இந்த சந்தர்ப்பத்தில் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு முயற்சிப்பவர்கள் குறித்து எமக்கு துல்லியமாக மதிப்பீடு செய்ய முடியாதுள்ளது.”
தமது சம்மேளனம் அனைத்து முன்னணி தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களோடு அங்கத்துவம் பெற்றுள்ள நிறுவனங்களுடன் நெருக்கமாக இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதாக SLCPI தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
9 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
27 Jan 2026