2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கோட்டையிலுள்ள Baurs’ கட்டடத்தின் 80 வருட பூர்த்தி

S.Sekar   / 2021 ஏப்ரல் 26 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டையில் மேல் சத்தாம் வீதியில் அமைந்துள்ள பழமையான Baurs கட்டடம் தனது 80 வருடப் பூர்த்தியைக் கொண்டாடியதுடன், அதனைக் குறிக்கும் வகையில் முன் அலுவலகப் பகுதி சுவிஸ் பெறுமதிகளைக் குறிக்கும் வகையில் நவீன வசதிகளைக் கொண்டு மெருகேற்றப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த கண்கவர், புகழ்பெற்ற கட்டடத்தில் இலங்கையின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட வியாபாரக் குழுமமான A. Baur & Company Ltd இன் தலைமையகம் அமைந்துள்ளது. 1897 ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டவரான அல்பிரட் பவர் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது முதல், சுவிஸ் நாட்டின் பாரம்பரியத்துக்கமைய நிறுவனத்தின் கொள்கைகள், பெறுமதிக் கட்டமைப்புகள் மற்றும் கலாசாரம் போன்றன ஆழமாக ஊடுருவியுள்ளன.

1941 ஆம் ஆண்டு கொழும்பில் நிறுவப்பட்ட Baurs கட்டடம், கொழும்பில் முதன் முறையாக நிறுவப்பட்ட தாக்கங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய கட்டடமாக அமைந்துள்ளது. கடற்படை தலைமையக வளாகத்தினுள் பாதுகாப்பாக அமைந்துள்ளது. இதுவரையில் பத்து முகாமைத்துவ பணிப்பாளர்கள் இங்கு கடமையாற்றியுள்ளதுடன், இதில் ஒன்பது பேர் சுவிஸ் நாட்டவர்களாவர், அண்மையில் நியமனம் பெற்ற புகழ்பெற்ற இலங்கையின் வியாபார பிரமுகரான லக்ஷ்மன் நியன்கொட தற்போது நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரமற்ற தவிசாளராக பணியாற்றுகின்றார்.

லக்ஷ்மன் கருத்துத் தெரிவிக்கையில், “Baurs பயணத்தில் இந்த ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. கொழும்பில் அமைந்துள்ள எமது கட்டடம் 80 வருட பூர்த்தியைக் கொண்டாடுகின்றது. எமது சகல திட்டங்கள், பிரார்த்தனைகள் மற்றும் அதீத ஈடுபாடுகளை இந்தக் கட்டடத்தின் சுவர்கள் நன்கறியும். இந்த கட்டடத்துடன் நாம் அதிகளவு உணர்வுபூர்வமான இணைப்பையும் கொண்டுள்ளோம். கட்டடத்தின் முகப்புப் பகுதிகளில் புனரமைப்பு மேம்படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு, நவீன தோற்றமும் வழங்கப்பட்டுள்ளது. இவற்றினூடாக எமது எதிர்கால நோக்கங்கள் பிரதிபலிக்கப்பட்டுள்ளதுடன், நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த சுவிஸ் பெறுமதிகளுக்கமைய காணப்படுகின்றது.” என்றார்.

Baurs’இன் கீர்த்தி நாமம் என்பது அதன் நம்பிக்கை, உறுதித் தன்மை, தரம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை பிரதிபலிக்கின்றது. நிறுவனத்தின் உறுதியான வழிமுறையினூாக நாட்டின் தொழிற்துறையில் பல முன்னோடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தது. துறையின் முன்னோடியாக பரவலாக அறியப்படும் Baurs, 1897 ஆம் ஆண்டு முதல் விவசார உரம் தொடர்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த முதல் நிறுவனமாக அமைந்துள்ளது.

முன்னோடியாக திகழ்கின்றமைக்கான உதாரணங்களாக, முதன் முறையாக இலங்கையின் புகையிரத சேவையை பயன்படுத்தி வணிக சரக்குகளை போக்குவரத்து செய்திருந்தமை, 1901 ஆம் ஆண்டில் விவசாயிகளுடன் விஞ்ஞான ரீதியான அறிவு மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்திருந்தமை, 1919 ஆம் ஆண்டில் டிராக்டர்களை விவசாயத்தில் பயன்படுத்தியதனூடாக, விவசாய நடவடிக்கைகளை பொறிமுறைப்படுத்து ஆரம்பித்திருந்தமை, 1936 ஆம் ஆண்டு முற்றிலும் மின்னூட்டப்பட்ட தேயிலைத் தொழிற்சாலையை நிறுவியிருந்தமை, 1946 ஆம் ஆண்டு நாட்டில் மலேரியா நோயை இல்லாமல் செய்திருந்தமை, இலங்கைக்கு சுவிஸ் எயாரை அறிமுகம் செய்திருந்தமை, 1965 ஆம் ஆண்டில் இலங்கையின் முதலாவது பாஸ்மதி அரிசியை உற்பத்தி செய்திருந்தமை, கடந்த ஆண்டு சேனா புழுக்களை கட்டுப்படுத்துவதற்காக பூச்சிகொல்லியை அறிமுகம் செய்திருந்தமை மற்றும் மிக அண்மையில் நாட்டின் விருந்தோம்பல் கல்வித் துறைக்கு சுவிஸ் தொழிற்பயிற்சி மாதிரியை நிறுவியிருந்தமை போன்றன அடங்குகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .