2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

சிங்கரிடமிருந்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

Gavitha   / 2017 ஜனவரி 09 , பி.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி, CKD எனும் சிறுநீரக நோயை இல்லாதொழிப்பதற்கு மேற்கொண்டுவருகின்ற பங்களிப்புக்களின் சமீபத்தைய முயற்சியாக, அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள உலுக்குளம என்ற கிராமத்துக்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையமொன்றை நன்கொடையளித்துள்ளது. ஹேலீஸ் குழுமத்தின் Puritas நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் நீர்வழங்கல் சபையின் வழிகாட்டலின் கீழ் அவற்றுடன் இணைந்து இச்செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்கு ரூ. 4 மில்லியன் தொகையை சிங்கர் ஸ்ரீ லங்கா வழங்கியுள்ளது.  

உலுக்குளம கிராமத்தில் வசிக்கின்ற 1,600 இற்கும் மேற்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கி, அவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் Reverse Osmosis plant என தொழில்நுட்ப ரீதியாக அறியப்படுகின்ற குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு சிங்கர் நிறுவனம் முன்வந்ததுடன், ஹேலீஸ் குழுமத்தின் அங்கமான Puritas Pvt Ltd நிறுவனத்துடன் இணைந்து கூட்டாக இதனை முன்னெடுப்பதற்கு அநுராதபுரம் மாவட்டத்தில் CKD எனப்படுகின்ற சிறுநீரக நோயினால்  பாதிக்கப்பட்டுள்ள உலுக்குளம கிராமத்தைத் தெரிவு செய்திருந்தது.  

புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்தக் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அதன் விநியோகத் திட்டமானது, அக்கிராமத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஒன்பது இடங்களில் குடிநீர் விநியோக மையங்களைக் கொண்டுள்ளதுடன், அவற்றின் மூலமாக, அங்கு வசிப்போர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மிகவும் சௌகரியமாகப் பெற்றுக்கொள்ள முடியும். இச் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலமாக, தினசரி 10,000 லீட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுவதுடன், அங்கு வசிப்போருக்கு லீட்டர் ஒன்று ரூ.1/= என்ற விலையில் குடிநீர் விற்பனை செய்யப்படுகின்றது. இதன் மூலமாகச் சேகரிக்கப்படுகின்ற நிதி, இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் பேணவும், எதிர்காலத்தில் தேவைப்படுகின்ற வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படும்.  

வட மேல் மாகாணத்திலும், அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும், அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருந்தப் பல்வேறு ஆராய்ச்சிகளின் அடிப்படையில், சுத்திகரிக்கப்படாதக் குடிநீரை அருந்துவதாலேயே அங்கு வசிப்பவர்கள் CKD எனப்படுகின்ற சிறுநீரக நோயில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என கண்டறியப்பட்டுள்ளது. இக்கிராமத்தில் வசித்துவருகின்ற 1,600 பேரில் 65 பேர் CKD நோயின் அறிகுறிகளைக் கொண்டுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளனர். அநுராதபுரம் மாவட்டத்திலும், அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் வசிக்கின்ற 400,000 வரையான மக்கள் CKD எனும் சிறுநீரக நோயின் நேரடிப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகப் பதிவுகள் காண்பிக்கின்றன. குடிநீரினால் ஏற்படுகின்ற நோய் என கண்டறியப்பட்டுள்ள CKDஇன் பாதிப்பினால் இது வரை 25,000 பேர் ஏற்கெனவே உயிரிழந்துள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் காண்பிக்கின்றன.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X