2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சிறுநீரக நோய்களுக்கு சிகிச்சை

Gavitha   / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிரி சேர்ஜிகல் ஹொஸ்பிட்டல்ஸ், துறையில் காணப்படும் திறமையும், அனுபவமும் வாய்ந்த மருத்துவ நிபுணர்களைத் தன்வசம் கொண்டுள்ளதுடன், நவீன மருத்துவ சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களையும் பின்பற்றி வருகிறது.

நாட்டில் காணப்படும் சிறந்த சிறுநீரக சிகிச்சை நிலையத்தை இந்த வைத்தியசாலை தன்னகத்தே கொண்டுள்ளதுடன், இந்நிலையத்தின் மூலமாக சிறுநீரகம் தொடர்பான எந்தவொரு பரிசோதனைகளையும் மேற்கொள்ளும் வசதிகள் காணப்படுகின்றன.

மேலும், நாட்டில் காணப்படும் சிறந்த சிறுநீரக சிகிச்சை நிபுணர்களின் சேவைகளை இந்த வைத்தியசாலையிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும். சிறுநீரகத்துடன் தொடர்புடைய வௌ;வேறு நோய்கள் காணப்படுகின்றன. சிறுநீரை மனித உடலிலிருந்து வடித்து வெளியேற்றுவதுடன் தொடர்புபட்டதாக இந்நோய்கள் அமைந்திருப்பதுடன், இவை ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சகல வயதையும் சேர்ந்தவர்களைப் பாதிக்கும் வகையில் அமைந்திருக்கும்.

மிகவும் பொதுவான நோய்களாக, சிறுநீரக கற்கள் மற்றும் ஆண்களின் சிறுநீர் குழாய் பெரிதடைதலுடன் தொடர்புடைய பிரச்சனைகளாக அமைந்துள்ளன. சிறுநீரகத் தொகுதியைப் பொறுத்தமட்டில் சாதாரண நோய்த் தொற்று முதல், உயிராபத்தை ஏற்படுத்தும் நிலை வரை வௌ;வேறு பிரச்சினைகள் எழக்கூடும். சிறுநீரகத் தொகுதி என்பது, சிறுநீரகங்கள், சிறுநீர்க்குழாய் மற்றும் சிறுநீர்ப்பை ஆகியவற்றுடன் தொடர்புடையதாக அமைந்துள்ளது.

உடலிலிருந்து கழிவை அகற்றும் பிரதான செயற்பாடுகளுக்கு பொறுப்பு வாய்ந்ததாக இந்தத் தொகுதி அமைந்துள்ளது. குருதி அழுத்தத்தை கட்டுப்படுத்துவதுடன், குரதியின் அளவைக் கட்டுப்படுத்துவதிலும் பங்களிப்பு செய்கிறது. சிறுநீரகத்தொகுதியுடன் தொடர்புடைய கோளாறுகள் பெருமளவில் ஆரம்ப நிலையிலேயே இனங்காணப்படுகின்றன. ஏனெனில், தொற்றா நோய்களான உயர் கொலஸ்ரோல் மற்றும் நீரிழிவு போன்ற நிலைகள் இதனுடன் தொடர்புடையதாக அமைந்துள்ளன.

ஆசிரி சேர்ஜிகல் ஹொஸ்பிட்டலின் சிரேஷ்ட சிறுநீரக சிகிச்சை வைத்திய நிபுணரான வைத்தியர். அனுர விஜேவர்தன கருத்து வெளியிடுகையில், ஆரம்ப நிலையில் சிறுநீரகத் தொகுதியில் கற்கள் இருப்பதை இனங்கண்டு சிகிச்சை முறையை தீர்மானிப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பெருமளவான கற்தொகுதிகளை மருத்துவ சிகிச்சை மூலமாக குணப்படுத்திக் கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார். கற்கள் சார்ந்த நோய்களின் போது காணப்படும் பொதுவான அறிகுறிகள் பற்றி பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது மிகவும் முக்கியமானதாகும்.

'ஆண்களின் சிறுநீரகப் பையில் கற்கள் பதிவது என்பது சிறுநீரகக்குழாய் வீக்கமடைவதுக்கு ஏதுவாக அமைகிறது. 40 வயது நடுப்பகுதியைச் சேர்ந்த ஆண்கள் மத்தியில் நாம் இதைக் காண்கிறோம். இதில் பெரும்பாலானவை புற்றுநொயை ஏற்படுத்தாதவை. இதில் சுமார் 18ம% - 20% சீறுநீரகக்குழாயில் புற்றுநொயை ஏற்படுத்துவதாக இருக்கலாம். இது மிகவும் குறைந்த எண்ணிக்கையாக அமைந்திருந்த போதிலும், சமூகத்தில் ஆண்கள் மத்தியில் பெரும் பிரச்சினையாக அமைந்துள்ளது. 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் உடனடி மருத்துவ கவனிப்பை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றனர்.' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X