2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சுற்றுலா செல்லிடமாக இலங்கை தெரிவு

Gavitha   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியர்களுக்கு அவர்களது விடுமுறையை களிப்பதற்கு உலகின் சிறந்த பகுதியாக இலங்கையை, பிரித்தானிய சஞ்சிகையான சன்டே டைம்ஸ் அறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை வெளியாகியிருந்த சஞ்சிகையில் இரு ஆக்கங்கள் இலங்கையின் சுற்றுலாப்பகுதிகளை அடையாளம் காண்பித்திருந்ததுடன், இந்த குளிர் காலப்பகுதியில் தமது சுற்றுலாவை மேற்கொள்வதற்கு இலங்கையின் 10 பகுதிகளையும் குறிப்பிட்டிருந்தது. அந்த ஆக்கத்தில் இலங்கையின் தேயிலை மற்றும் கடற்கரைகளின் சிறப்பம்;சங்கள் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.

இலங்கையின் நகரங்களுக்கு மேலாக, பார்படோஸ், சீஷெல்ஸ், சென்.லுசியா, கோவா, மொரிஷியஸ், மெக்சிகோ, பிரேசில் மற்றும் கேப் டவுன் ஆகிய நகரங்கள் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டிருந்தன.

நடப்பு முதல் எட்டு மாதங்களில் பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 சதவீத அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. ஓகஸ்ட் மாத நிறைவில் மொத்தமாக 111,131 பேர் சுற்றுலாப் பயணிகளாக இலங்கைக்கு வருகை தந்திருந்ததுடன், ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 17,908 பேர் இலங்கைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 15 சதவீத அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X