2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

செலான் வங்கிக்கு புதிய பணிப்பாளர்கள்

Gavitha   / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் வங்கி அதன் பணிப்பாளர் சபையின் சுயாதீன பணிப்பாளர்களாக அனுஷ்க விஜேசிங்ஹ மற்றும் சந்யா சல்காடோ ஆகிய இருவரையும் டிசெம்பர் 1ஆம் திகதி முதல் நியமித்துள்ளது.

பல்வேறு ஆசிய நாடுகளில் ஆய்வுகள் மற்றும் ஆலோசகராகப் பணியாற்றியுள்ள அனுஷ்க விஜேசிங்ஹ பொருளாதார வல்லுநர் ஆவார். புத்தாக்கம், தனியார் துறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச பொருளாதாரம் ஆகியவை தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச வெளியீடுகளை வெளியிட்டுள்ளார். இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதான பொருளாதார வல்லுநராகவும் பொருளாதார புலனாய்வு பிரிவின் தலைவராகவும் அவர் செயற்படுகிறார்.

இங்கிலாந்தின் University of Leeds Business School இடமிருந்து பொருளாதாரமும் அபிவிருத்தியில் முதுநிலை பட்டத்தையும் University College London இடமிருந்து பொருளாதாரப் பிரிவில் BSc (Hons) பட்டத்தையும் பெற்றுள்ள அனுஷ்க உலக பொருளாதார மன்றத்தில் “New Champions” விருது வழங்கி கௌரவி க்கப்பட்டுள்ளதுடன்   World Economic Forum Global Shapers Colombo Hubஇன் காரணகர்த்தாவும் ஆவார். யூனியன் அசுரன்ஸ் பொது காப்புறுதி மற்றும் HNB கிராமீன் நிதி ஆகியவற்றின் பணிப்பாளர் சபையிலும் அங்கம் வகிக்கின்றார். உலக வங்கி, ADB, UNDP, GIZ மற்றும் UNESCAP ஆகியவற்றுக்கு ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். அனுஷ்க, கொரிய அபிவிருத்தி நிறுவனம், கொள்கைக ளுக்கான கற்கை நிறுவனம், வரிவிதிப்பு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் அரசாங்க சமாதான செயலகம் ஆகியவற்றில் சேவையாற்றியுள்ளார்.  

\சந்யா சல்காடோ Strategic Communications மற்றும் நிலைத்தகு வியாபார முகாமைத்துவம் ஆகியவற்றில் 30 வருட அனுபவத்தைப் பெற்றுள்ளார். சந்யா மொழிகள் தொடர்பான பட்டப் படிப்பைப் பூர்த்தி செய்துள்ளதோடு சர்வதேச வணிகம் தொடர்பான MBA மற்றும் Chartered Institute of  Marketing (MCIM -UK)ன் உறுப்பினராகவும் உள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X