Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 நவம்பர் 22 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிய சந்தைப்படுத்தல் சம்மேளனத்தினால் வழங்கப்படும் சந்தைப்படுத்தலில் சிறப்பு விருதான, சந்தைப்படுத்தல் 3.0 எனும் விருது சம்பத் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில், தென்கொரியாவின் சியொல் நகரிலுள்ள KCCIஇல் நடைபெற்றது. சந்தைப்படுத்தல 3.0 விருது மற்றும் ஆண்டின் சிறந்த சந்தைப்படுத்தல் நிறுவனம் ஆகியன குறித்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் வழங்கப்பட்ட பிரதான இரு விருதுகளாக அமைந்திருந்தன.
தேசத்துக்கு முக்கியத்துவம் வழங்கி, வாடிக்கையாளர்களை மையமாகக்கொண்டு பெறுமதி வாய்ந்த சேவைகளை வழங்கி வரும் சம்பத் வங்கி, இந்த சந்தைப்படுத்தல் 3.0 விருதுக்காக, இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகத்தினால் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகம் மற்றும் AMFஇனால் முன்னெடுக்கப்பட்டிருந்த பல்வேறு மதிப்பாய்வு செயற்பாடுகளில், வங்கி போட்டியாளர்களை விட முன்னிலையில் காணப்பட்டது.
சந்தைப்படுத்தல் 3.0 விருதின் மூலமாக வங்கியின் நோக்கம், தன்னேற்புத் திட்டம் மற்றும் பெறுமதிகள் போன்றவற்றைப் பேணுகின்ற கலாசாரம் கௌரவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வங்கியின் சந்தைப்படுத்தல் கொள்கை நுகர்வோரின் தேவைகளை மட்டும் பிரதிபலிக்காமால், நுகர்வோரின் ஒன்றிணைந்த தேவைகளையும், கலாசார சந்தைப்படுத்தல் பின்பற்றல்களையும் கலாசார மற்றும் பண்பார்ந்தச் சந்தைப்படுத்தல் வழிமுறைகளையும் கௌரவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. சௌகரியம், புத்தாக்கம் மற்றும் பெறுமதி சேர்ப்புகள் போன்ற வினைத்திறன் வாய்ந்த வங்கியியல் தீர்வுகளை வழங்குகின்றமைக்காக சம்பத் வங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. வங்கியின் வளர்ச்சி, சந்தைப்பங்கு மற்றும் தேறிய வருமானம் போன்றவற்றில் இது குறிப்பிடத்தக்களவு பங்கைக் கொண்டுள்ளது.
இந்த சாதனைத் தொடர்பில், சம்பத் வங்கியின் நுகர்வோர் வங்கிப் பிரிவின் சிரேஷ்ட பதில் பொது முகாமையாளர் தாரக ரன்வல கருத்துத் தெரிவிக்கையில், “சகல வங்கிச் செயற்பாடுகளிலும் வாடிக்கையாளர்களை முன்னிலையில் பேணும் பெறுமதி கட்டமைப்பை பேணுவது மற்றும் முன்நிறுத்துவது போன்றவற்றின் அடிப்படையில் சம்பத் வங்கியைச் சேர்ந்த நாம் இயங்குகிறோம். தேசத்தை மனதில் கொண்ட வங்கி எனும் வகையில், நாம் தொடர்ந்து சவால்கள் மற்றும் எல்லைகளை எய்தி பெறுமதி வாய்ந்த சேவைகளையும் அனுகூலங்களையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம். இவை வாடிக்கையாளர்களின் நலனிலும், நாட்டின் பொருளாதாரத்திலும் சிறந்தப் பங்களிப்பைப் பதிவு செய்கின்றன” என்றார்.
32 minute ago
34 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
34 minute ago
1 hours ago
2 hours ago