2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

சரக்கு கையாளல் செயற்பாடுகளின் மீட்சிக்கு எக்ஸ் போலங்கா உதவி

Editorial   / 2020 ஓகஸ்ட் 25 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னணி ஒன்றிணைக்கப்பட்ட சர்வதேச சரக்கு கையாளல் சேவை வழங்குநரான எக்ஸ்போலங்கா ஃபிரயிட் (EFL), மத்தல ராஜபக்ஷ விமான நிலையத்தினூடாக உள்வரும் தமது சொந்த நாடுகளுக்கு மீளத் திரும்பும் பயணிகள் விமான சேவைகளினூடாக பொது மற்றும் இலகுவில் பழுதடையக் கூடிய பொருட்கள் இரு தொகுதிகளின் சரக்குக் கையாளலை வெற்றிகரமாக பூர்த்தி செய்திருந்ததென அறிவித்துள்ளது.

2013 ஆம் ஆண்டில் மத்தல ராஜபக்ஷ விமான நிலையத்தினூடாக முதன் முறையாக சரக்குகளை வெளி அனுப்பியிருந்தமை, தொற்றுப் பரவல் காலப்பகுதியிலும் செயற்பாடுகளை ஆரம்பித்திருந்த முதல் நிறுவனம் ஆகிய பணிகளுடன், நாட்டில் கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு பின்னரான துரித பொருளாதார மீட்சியை ஏற்படுத்திக் கொள்ளும் தேசிய கொள்கைக்கமைய நுகுடு பணியாற்றியிருந்தது.

கடந்த மாதத்தில், நுகுடு இனால் 25 தொன்கள் எடை கொண்ட பொதுச் சரக்குத் தொகுதி கொழும்பிலிருந்து துபாய் மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளுக்கு எமிரேட்ஸ் சொந்த நாடுகளுக்கு மீளத் திரும்பும் பயணிகள் விமான சேவையினூடாக ஆகஸ்ட் 9 ஆம் திகதி அனுப்பியிருந்தது.

அதுபோன்று, லங்கா (பிரைவட்) லிமிடெட்டினால் 2020 ஆகஸ்ட் 16 ஆம் திகதி ஏற்றுமதிக்காக விநியோகிக்கப்பட்டிருந்த 4 தொன்கள் எடை கொண்ட பழங்கள் மற்றும் மரக்கறிகள் போன்றவற்றையும் Salaam Air ஊடாக அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. குறிப்பாக மத்தல மற்றும் பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கிடையிலான உள்ளக தரை வழியான சரக்கு போக்குவரத்து சேவை EFL இன் இலகுவில் பழுதடையும் பொருட்களை கொண்டு செல்வதற்கான விசேடத்துவம் வாய்ந்த வாகனத் தொடரணி மற்றும் பொதுச் சரக்கேற்றலுக்கான நியம தொடரணியினூடாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மத்தல ராஜபக்ஷ விமான நிலையத்தினூடாக சரக்கு போக்குவரத்து செயற்பாடுகளை முன்னெடுக்கும் அரசாங்கத்தின் மீள வலுவூட்டும் செயற்பாடுகளுக்கு அவசியமான சர்வதேச வலையமைப்புடன், அவசியமான ஆற்றல், உயர் நிபுணத்துவம் ஆகியவற்றைக் கொண்ட ஒரே சரக்குக் கையாளல் நிறுவனமாக திகழ்வதையிட்டு EFL பெருமை கொள்கின்றது. இந்த செயற்பாடுகள் சர்வதேச சந்தைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை அனுப்புவதாக அமைந்திருப்பதுடன், காணப்படும் சகல சவால்களுக்கும் முகங்கொடுத்த நிலையில், ஏற்றுமதிக்கு இலங்கை தன்னை வெளிப்படுத்தி வருகின்றமையை காண முடிகின்றது.'

EFL முகாமைத்துவ பணிப்பாளர் சயிஃவ் யூசுஃவ் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லை எய்துவதில், எமக்கு பூரண ஆதரவும் உதவிகளையும் வழங்கியிருந்த விமான நிலைய அதிகார அமைப்புகள் மற்றும் சுங்க அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதுடன், வேகமாகவும், அர்ப்பணிப்புடனும் செயலாற்றியிருந்த எமது சர்வதேச பங்காளர்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றோம். எமது சக குடிமக்களை பாதுகாப்பான வகையில் தமது சொந்த நாடுகளுக்கு மீளத் திரும்புவதற்கு வழியேற்படுத்தும் அதேவேளை, இலங்கையின் பொருளாதாரத்தை வினைத்திறன் வாய்ந்த வகையில் முன்னேற்றுவதற்கு நாம் வழங்கும் பங்களிப்பை முன்னெடுக்க முடிந்தது” என்றார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், 'மத்தல ராஜபக்ஷ விமான நிலையத்தின் செயற்பாடுகளை மேம்படுத்துவதனூடாக, நாட்டின் பொருளாதாரத் துறைக்கும், அதனுடன் தொடர்புடைய துறைகளுக்கும் பாரிய அனுகூலங்களை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். பாரிய விவசாய பதப்படுத்தல் வலயத்தை அண்மித்து மத்தல விமான நிலையம் அமைந்துள்ளமையால், உள்நாட்டு உற்பத்தியாளர்களின் பழங்கள், மரக்கறிகள் மற்றும் பாலுற்பத்திகளுக்கு சர்வதேச சந்தைகளை இலகுவாக அணுகுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.' என்றார்.

கொவிட்-19 தொற்றுப் பரவல் ஆரம்பித்ததைத் தொடர்ந்து, மத்தல ராஜபக்ஷ விமான நிலையத்தின் செயற்பாடுகள் படிப்படியாக அதிகரித்த வண்ணமுள்ளன. ஜுன்-ஜுலை மாத காலப்பகுதியில் சொந்த நாடுகளுக்கு மீளத்திரும்பும் பயணிகளை ஏற்றிச் செல்லல் மற்றும் சர்வதேச கப்பல் பணியாளர்களை மாற்றுவதற்காக 50 க்கும் அதிகமான விமானங்கள், 2188 பயணிகளுடன் இந்த விமான நிலையத்தினூடாக பயணித்துள்ளன.

விநியோகச் சங்கிலி தீர்வுகளை வழங்குவதில் முன்னணி நிறுவனமாக நுகுடு திகழ்கின்றது. உலகின் சிறந்த 30 ஆகாய சரக்குக் கையாளல் நிறுவனங்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளது. 1982 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட EFL இலங்கையில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. நவநாகரீகம் மற்றும் தொழில்நுட்ப சரக்குக் கையாளல் செயற்பாடுகளுக்காக நிபுணத்துவம் பெற்றுள்ளதுடன், முன்னணி விமான சேவை வழங்குநர்களுடன் கைகோர்த்து, அமெரிக்காவுக்கு வாராந்தம் நேரடி விமான சேவைகளை வழங்கி வருகின்றது.

சரக்குக் கையாளல், விருந்தோம்பல் மற்றும் முதலீடுகள் போன்ற துறைகளில் செயற்படும் முன்னணி பன்முக நிறுவனமான எக்ஸ்போலங்கா பிஎல்சியின் அங்கத்துவ நிறுவனமாக EFL திகழ்கின்றது. மட்டுப்படுத்தப்பட்ட சரக்கு கையாளல் உட்கட்மைப்பு சந்தைகளில் செயலாற்றியுள்ளதுடன், 23 நாடுகளில், 60 க்கும் அதிகமான அலுவலகங்களைக் கொண்டு 2300 ஊழியர்களுடன் செயலாற்றி வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X