Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜனவரி 10 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
டேர்டன்ஸ் கொஸ்மடிக் கிளினிக்கில் உள்ள அழகுசாதன சிகிச்சை நிபுணர் குழுவானது, இயற்கையான தோற்றத்தை வழங்கும் வகையில் தனிப்பட்ட மருத்துவ சிகிச்சை முறைமைகள், அறுவைச் சிகிச்சைகளுடனான ஒப்பனை மேம்படுத்தல்களை வழங்குகின்றது.
வயது, கர்ப்பந்தரித்தல், ஹோர்மோன்களின் மாற்றம், உடல் எடை அதிகரித்தல் என்பன எமது சருமம், கூந்தல் போன்றவற்றில் மாற்றத்தை எற்படுத்தும். மரபணு, மனஅழுத்தம் என்பனவும் கூந்தல் உதிர்வடைதலை அதிகரிக்கும். ஆரோக்கியமான சருமம், கூந்தலை மீளப்பெறுவதற்கு உதவும் வகையில் பல மருத்துவ சிகிச்சைகள் காணப்படுகின்றன.
மருத்துவ அழகுசாதன நிபுணரிடமிருந்து, தனிப்பட்ட ஆலோசனைகளைப் பெறுவதுடன் இரசாயன சமன்செய்தல்கள், லேசர் சிகிச்சைகள், டெர்மாபிரேசன் போன்ற சிகிச்சைகளில் ஒன்றை, அல்லது அதற்கு மேற்பட்டவற்றைப் பெறுவதன் மூலம், சீரற்ற சருமம், முகப்பருக்கள், வடுக்கள், நிறமிகளுள்ள சருமங்களில் புலப்படும் வேறுபாட்டை ஏற்படுத்த முடியும்.
முதிர்வடையும் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், கோடுகள், வடுக்களைக்கொண்ட பிரச்சினையுள்ள இடங்களுக்கு botox ஊசிகளை உட்செலுத்துவதன் மூலம் சிகிச்சையளிக்க முடியும். சாதாரண கிறீம்களால் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வளிக்க இயலாது; மாறாக மருத்துவ சிகிச்சை முறையான botox மூலமே திறம்பட சிகிச்சையளிக்க இயலும். குழிவிழுந்த கண்களுக்கு டேர்மல் பில்லர்ஸ் சிகிச்சை முறைமையானது இளமையான தோற்றத்தைப் பெற்றுத்தரும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
42 minute ago