Editorial / 2020 மே 24 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிங்கர் ஃபினான்ஸ் (லங்கா) பி.எல்.சி, அதன் சமீபத்திய பட்டியலிடப்பட்ட, மதிப்பிடப்பட்ட, பாதுகாப்பற்ற, மூத்த, மீட்டுக் கொள்ளக்கூடிய மூன்று ஆண்டு,ஐந்தாண்டு, காலப்பகுதிக்கான கடன் பத்திரங்களுக்கு, முதலீட்டாளர்களிடமிருந்து வலுவான நம்பிக்கையைப் பெற்றுள்ளதாக, நிறுவனம் அறிவித்துள்ளது.இதன்மூலம், ஒரு பில்லியன் ரூபாய் கடன் பத்திர வெளியீடுக்கு, அதிக சந்தா திரட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இச்சந்தா ஏற்றுக் கொள்வது, 2020 மே 13புதன்கிழமை முடிவடைந்தது. இந்தக் கடன் பத்திரத்துக்கு Fitch Ratings Lanka Limited இனால், BBB (lka) எனத் தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளமையும்குறிப்பிடத்தக்கது.
சிங்கர் ஃபினான்ஸ் என்பது, 75% சிங்கர் (ஸ்ரீ லங்கா) பி.எல்.சிக்குச் சொந்தமான துணை நிறுவனமாகும். அத்துடன், இலங்கையின் மிகப்பெரிய வணிகநிறுவனங்களில் ஒன்றான, ஹேலிஸ் பி.எல்.சிக்குச் சொந்தமானது. இந்தக் கடன் பத்திர சந்தாத் திரட்டலானது, முதலீட்டாளர்களால் நிறுவனத்தின் மீதுவைக்கப்பட்டுள்ள நம்பிக்கைக்குச் சான்றாக அமைந்துள்ளதாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
23 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago