2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சிங்கர் ரெட் உள்ளத்தின் பரிசு அறிமுகம்

Freelancer   / 2023 ஜூலை 28 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கர் ஸ்ரீ லங்கா, பெருமளவில் எதிர்பார்க்கப்பட்ட சிங்கர் ரெட் “ஹதவதே தேகி” (உள்ளத்தின் பரிசு) – லோயல்டி அதிர்ஷ்டசாலி தெரிவை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அதிர்ஷ்டசாலி தெரிவினூடாக, வாடிக்கையாளர்களுக்கு தமது லோயல்டி நிலையின் பிரகாரம் பெறுமதியான பரிசுகளையும் வெல்வதற்கும், அனுகூலங்களை பெற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2023 ஜுலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை முன்னெடுக்கப்படும் சிங்கர் ரெட் “ஹதவதே தேகி” (உள்ளத்தின் பரிசு) – லோயல்டி அதிர்ஷ்டசாலி தெரிவு திட்டத்தில் நாடு முழுவதையும் சேர்ந்த சிங்கர் லோயல்டி வாடிக்கையாளர்கள் பங்கேற்க முடியும். நாடு முழுவதிலும் காணப்படும் எந்தவொரு சிங்கர் காட்சியறையிலும் தமது ரெட் லோயல்டி புள்ளிகளை பயன்படுத்துவதனூடாக, இந்த அதிர்ஷ்டசாலி தெரிவுக்கு வாடிக்கையாளர்கள் சுயமாக தகைமை பெறுவார்கள்.

ஒவ்வொரு தடவை புள்ளிகளை பயன்படுத்தும் போதும் வாடிக்கையாளர்களுக்கு பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். Deluxe மற்றும் Premier நிலை வாடிக்கையாளர்களுக்கு ஒரு தடவை புள்ளிகளை பயன்படுத்தினால் ஒரு வெற்றி வாய்ப்பும், VIP வாடிக்கையாளர்களுக்கு இரண்டு வாய்ப்புகளும் வழங்கப்படும்.

இந்தத் திட்டம் தொடர்பில் சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி முகாமைத்துவ பணிப்பாளர் ஷனில் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “சிங்கர் ரெட் “ஹதவதே தேகி” (உள்ளத்தின் பரிசு) – லோயல்டி அதிர்ஷ்டசாலி தெரிவு திட்டத்தை அறிமுகம் செய்வது தொடர்பில் அறிவிப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அதன் பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கான சிங்கரின் அர்ப்பணிப்புக்கான எடுத்துக்காட்டாக இந்த பிரத்தியேகமான அதிர்ஷ்டசாலி தெரிவு அமைந்துள்ளது. எமது வாடிக்கையாளர்களுக்கு மீள வழங்குவது முக்கியமானது என்பதுடன், அவர்களுக்கு வெகுமதிகள் நிறைந்த அனுபவத்தை பெற்றுக் கொடுப்பது முக்கியமானது என நாம் கருதினோம். இந்த அதிர்ஷ்டசாலி தெரிவினூடாக, விறுவிறுப்பான பரிசுகள் வழங்குவதற்கு மேலதிகமாக, எம் மீது தொடர்ச்சியாக கொண்டுள்ள நம்பிக்கைக்கும், எம்மை தொடர்ந்தும் தெரிவு செய்கின்றமைக்காகவும் எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவிக்கவும் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

சிங்கர் ரெட் “ஹதவதே தேகி” (உள்ளத்தின் பரிசு) – லோயல்டி திட்டத்தில் பல்வேறு பெறுமதியான பரிசுகளை வெல்லும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல் பரிசாக ரூ. 1 மில்லியன் பெறுமதியான சாதனங்கள் தமது வசிப்பறையை புதுப்பித்து மேம்படுத்திக் கொள்வதற்காக வழங்கப்படும். இதில் வாயு குளிரூட்டி, தொலைக்காட்சி, மினி பார் குளிர்சாதனப் பெட்டி, சோஃபா, TV ஸ்டான்ட், டெப் மற்றும் பாதுகாப்பு கமரா போன்றன அடங்கும். மேலும் பத்து ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும். இதில் wardrobe, bicycle, grinder, mobile phone, sewing machine, air fryer, portable wireless speaker, fitness upright bicycle, Pureit water purifier மற்றும் pedestal fan போன்றன அடங்கியுள்ளன. ஆறுதல் பரிசு வெற்றியாளர்கள் இந்த அதிர்ஷ்டசாலி தெரிவு காலப்பகுதியில் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், இந்தத் திட்டத்தின் நிறைவில் மாபெரும் பரிசு வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.

ஆண்டின் முற்பகுதியில் சிங்கர் தனது சிங்கர் ரெட் லோயல்டி திட்டத்தை மீளஅறிமுகம் செய்திருந்தது. நாடு முழுவதையும் சேர்ந்த வாடிக்கையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பு காணப்பட்டது. ஒவ்வொரு கொள்வனவின் போதும் வாடிக்கையாளர்களுக்கு RED புள்ளிகளை திரட்டிக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டதுடன், அதனூடாக, பிரத்தியேகமான அனுகூலங்கள், விலைக்கழிவுகள் மற்றும் விசேட சலுகைகளை பெறும் வாய்ப்பும் வழங்கப்பட்டன. வாடிக்கையாளர்களுக்கு லோயல்டி திட்டங்களினூடாக அனுபவத்தை மேம்படுத்துவதில் சிங்கர் காண்பிக்கும் அர்ப்பணிப்பினூடாக, தாம் மேற்கொள்ளும் சகல செயற்பாடுகளினூடாகவும் வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவமளிப்பது எனும் அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறுமாறு தனது சகல லோயல்டி வாடிக்கையாளர்களையும் சிங்கர் ஊக்குவிப்பதுடன், சிங்கர் ரெட் “ஹதவதே தேகி” (உள்ளத்தின் பரிசு) – லோயல்டி திட்டத்தில் பங்கேற்குமாறும் அழைப்புவிடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X