2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

சியெட் ’பாடசாலை சிறுவர்களுக்கான வீதிப் பாதுகாப்பு’ திட்டம்

Freelancer   / 2023 ஜூன் 05 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சியட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனம் 2023ன் முதல் மூன்று மாதத்தில் 20 பாடசாலைகளுக்கு வீதிப் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி உள்ளது. இவை பிரதான வீதிகளை அண்மித்த உயர் போக்குவரத்து நெரிசல் வலயத்துக்குள் வரும் பாடசாலைகளாகும். நிறுவனத்தின் பாதுகாப்பான மற்றும் உறுதியான வீதிப் போக்குவரத்தை, மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் இவை வழங்கப்பட்டுள்ளன.

வீதிப் போக்குவரத்து தொடர்பான 150 சமிக்ஞை அட்டைகளுடன் கூடிய 330 உபகரணங்கள், 160 வீதிப் பாதுகாப்பு கூம்புகள், போக்குவரத்து சேவையில் ஈடுபடும் மாணவர்களுக்கான 20 மேல் அங்கிகள் என்பன பல மாவட்டங்களில் விநியோகிக்கப்பட்டன. 'பாடசாலை பிள்ளைகளுக்கான வீதிப் போக்குவரத்தில் சியெட் கவனம் செலுத்துகின்றது' என்ற திட்டத்தின் கீழ் இவை வழங்கப்பட்டன. இந்தத் திட்டம் 'மக யன மக' என்றும் அழைக்கப்படுகின்றது. இந்தப் பிரத்தியேகமான சமூக நலத் திட்டமானது வீதிகளில் பாதுகாப்பின் மீது சியெட் கொண்டுள்ள அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சியெட்டின் ஏனைய எல்லா உற்பத்திகளிலும் கூட இதுவே பிரதான கருப்பொருளாக உள்ளது. பாதுகாப்பை சிந்தனையில் கொண்டே இவை உருவாக்கப்படுகின்றன என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் நன்மை அடைந்த பாடசாலைகள் : ஆனந்தா கல்லூரி கொழும்பு-10, அனுல வித்தியாலயம் - நுகேகொடை, பண்டாரநாயக்க மத்திய கல்லூரி-வேயான்கொடை, தம்மிஸ்ஸார தேசிய கல்லூரி-நாத்தண்டிய, களனி மகா வித்தியலயம்-களனி, மகளிர் கல்லூரி–கொழும்பு 07, மகமாய மகளிர் மகா வித்தியாலயம்-கடவத்தை, மகாநாம கல்லூரி-கொழும்பு 03, மகரகம மத்திய கல்லூரி-மகரகம, மேரிஸ் ஸ்டெல்லா கல்லூரி-நீர்கொழும்பு, பேலியகொட ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம்-களனி, ஜனாதிபதி கல்லூரி-ஹோமாகம, ஜனாதிபதி கல்லூரி-களனி, ரத்னாவலி மகளிர் மகா வித்தியாலயம்-கொழும்பு08, சித்தார்த்த கல்லூரி-வெலிகம, புனித ஜோஸப் மகளிர் வித்தியாலயம்-நுகேகொடை, புனித ஜோஸப் கல்லூரி-நுகேகொடை, புனித ஜோஸப்வாஸ் கல்லூரி-வென்னப்புவ, சுபர்தி மகாமத்ய மகா வித்தியாலயம்-ஹோமகம மற்றும் விகாரமகாதேவி மகளிர் வித்தியாலயம்-கிரிபத்கொடை என்பனவாகும்.

பாடசாலை பிள்ளைகளுக்கான வீதிப் பாதுகாப்புத் திட்டத்தை சியெட் கடந்த ஆண்டில் மீண்டும் தொடங்கியது. நோய்ப்பரவல் நிலைமையை அடுத்து தேவைப்பட்ட ஒரு சிறிய இடைவெளியின் பின் உபகரணங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்ட ஒரு வடிவத்தில் இது தொடங்கப்பட்டது. ஆனால் இதன் அசல் வடிவம் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், போக்குவரத்து வசதிகளை வழங்குவோர் ஆகியோரோடு நேரடியாக சம்பந்தப்பட்டதாகும். குறிப்பாக பாடசாலை வேன் சாரதிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான கருத்தரங்குகள் இதில் பிரதானமாகும். வீதிப் பாதுகாப்பு கூம்புகள், பாதுகாப்பு அங்கிகள், போக்குவரத்து சமிக்ஞைகள் மற்றும் உபகரணங்களை பாடசாலைகளுக்கு நேரடியாக சென்று வழங்குதல் என்பனவற்றை உள்ளடக்கியதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X