Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஜனவரி 23 , மு.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
Sampath Sanhinda Saver கணக்கு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 100 மில்லியனுக்கும் மேற்பட்ட மருத்துவச் சலுகைகளை விநியோகித்துள்ளதாகச் சம்பத் வங்கி அறிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக ஒன்பது வருடங்களாக Sanhinda Saver கணக்கு வாடிக்கையாளர்கள் பேணி வந்துள்ள வருடாந்த சராசரி கணக்கு மீதியின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட சலுகைகளை வங்கி அவர்களுக்கு வழங்கியுள்ளது.
55 வயதுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் விசேடமான ஒரு கணக்காக Sanhinda Saver கணக்கை சம்பத் வங்கி அறிமுகப்படுத்தியிருந்தது.
இக்கணக்கின் வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த வட்டி வீதம் வழங்கப்படுவதுடன், மாதத்தில் இரு தடவைகள் வட்டிக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.
வெளிநாட்டு நாணய சேமிப்புக் கணக்குகளுக்கு மேலதிக வட்டி வழங்கப்படுகின்றது. பல முன்னணி வைத்தியசாலைகள், பார்மசிகள், மருத்துவ ஆய்வுகூடங்கள் மற்றும் ஏனைய விற்பனைப் பங்காளர்களிடம் ஏராளமான சலுகைகளையும் வங்கி அவர்களுக்கு இதன் மூலமாக வழங்குகின்றது.
Sanhinda மருத்துவ சலுகை அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது பாவனையில் உள்ள Sanhinda வவுச்சர்களுக்குப் பதிலாக அறிமுகமாக்கப்பட்டுள்ள இந்த அட்டை மகத்தான சௌகரியத்தையும், பாதுகாப்பையும் வழங்குகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
22 May 2025