Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
S.Sekar / 2021 ஓகஸ்ட் 27 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முழுவதிலும் கொவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமை அதிகரித்துள்ள நிலையில், நோயாளர்களை இனங்காண்பது, சிகிச்சையளிப்பது மற்றும் பராமரிப்பதற்கான முக்கிய மையங்களாக நாடு முழுவதையும் சேர்ந்த வைத்தியசாலைகள் திகழ்கின்றன. அதன் பிரகாரம் SLT-MOBITEL இனால் மூன்றாவது PCR பரிசோதனை இயந்திரம் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு அண்மையில் நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தது. ரூ. 5.2 மில்லியன் பெறுமதியான நன்கொடையினூடாக கம்பனியின் ‘Sabandiyawe Sathakaraya’ சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தினூடாக தேசத்தின் சுகாதாரப் பராமரிப்பு கட்டமைப்புகள் மற்றும் சமூகங்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன.
முன்னர், இயந்திரங்கள் மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலை, கரவனெல்ல ஆதார வைத்தியசாலை ஆகியவற்றுக்கு PCR இயந்திரங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்தன. தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி உதவும் வகையில் முன்னெடுக்கப்பட்டிருந்த சமூக ஈடுபாட்டுத் திட்டமான ‘Daana Paaramitha’க்கு பங்களிப்பு வழங்கியிருந்த அனைத்து இலங்கையர்களுக்கும் SLT-MOBITEL நன்றி தெரிவித்துக் கொள்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago