Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூலை 21 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூழல் வாரத்தை முன்னிட்டு, SLT-MOBITEL, லங்கா நேச்சர் கென்சர்வேஷனிஸ்ட்ஸ் (LNC) உடன் கைகோர்த்து சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டமொன்றை அண்மையில் முன்னெடுத்திருந்தது. “தென்கொழும்பு கரையோரப் பகுதிகளில் எஞ்சியிருக்கும் கடல் ஆமை இனப்பெருக்க சஞ்சாரிப்பு பகுதிகளை பாதுகாத்து மற்றும் மெருகேற்றல்” மற்றும் “கொழும்பில் காணப்படும் பிளாஸ்ரிக் கழிவுகளுக்கான தீர்வுகள்” எனும் தலைப்பில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒன்லைன் நிகழ்ச்சித் திட்டமாக இது போன்ற நிகழ்வுகளை SLT-MOBITEL முன்னெடுத்து, நெருக்கடியான சூழல்சார் பிரச்சனைகள் தொடர்பில் விழிப்புணர்வை கட்டியெழுப்பியிருந்தது. கொழும்பிலுள்ள கடற்படை தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கரையோரப் பாதுகாப்பு மற்றும் சூழல் பிரச்சனைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகள் பற்றி இந்த நிகழ்ச்சித் திட்டம் ஆராயப்பட்டிருந்தது. SLT இன் சந்தைப்படுத்தல் சேவைகள் பொது முகாமையாளர் அனுருத்த சூரியாரச்சி மற்றும் LNC இன் தலைவர் சமந்த குணசேகர ஆகியோர் சூழல்சார் பாதுகாப்புசார் செயற்பாடுகளை மேற்கொள்வதன் முக்கியத்துவம் பற்றி உரையாடியிருந்தனர்.
நிலைபேறான செயற்பாடுகளை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பிலும் இந்த செயற்குழுவினர் உரையாடியிருந்தனர். இந்த பேச்சாளர்களில் கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தின், கரையோர வளங்கள் நிர்வாக பணிப்பாளர், டபிள்யு.ஏ.என்.எஸ். ராஜரட்ன அடங்கியிருந்ததுடன், கரையோரப் பாதுகாப்பு மற்றும் சூழல் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர்.
வயம்ப பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியரும், கண்டல் தாவர பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பாவனை தொடர்பான தேசிய நிபுணர் குழுவின் தலைமை அதிகாரியுமான பேராசிரியர். செவ்வந்தி ஜயகொடி, கரையோர பகுதிகளை அர்த்தமுள்ள வகையில் இனங்காணல் மற்றும் இயற்கை தாவரங்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்ந்திருந்தார். ருஹுண பல்கலைக்கழகத்தின் பேராசிரியர். டேர்னி பிரதீப் குமார கருத்துத் தெரிவிக்கையில், கரையோரப் பகுதிகளில் பிளாஸ்ரிக் கழிவுகளால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் பொது மக்களின் பொறுப்புணர்வு தொடர்பில் உரையாற்றியிருந்தார். வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் சிரேஷ்ட கால்நடை வைத்தியர். சுஹத ஜயவர்தன குறிப்பிடுகையில், கடல் ஆமைகள் எதிர்கொள்ளும் பொதுவான காயங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட இடையீடுகள் பற்றி உரையாடியிருந்தார். குழுநிலை கலந்துரையாடல் மற்றும் கருத்துப் பெறும் செயற்பாடுகளுடன் இந்த நிகழ்ச்சித் திட்டம் பூர்த்தியடைந்திருந்ததுடன், புதிய சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்திருந்தது.
இலங்கை கடற்படை கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, இலங்கை கடற்படை பிரதி பிரதம அதிகாரி ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க, SLT-MOBITEL, LNC, இலங்கை கடற்படை, பொலிஸ் திணைக்களம் மற்றும் இதர திணைக்களங்கள், ஹோட்டல் துறை சேர்ந்த பங்குபற்றுனர்கள் ஆகியோரும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
“Earth Is Calling, Are You Listening?” திட்டம் SLT-MOBITEL இன் ESG முயற்சிகளுடன் பொருந்துவதாக அமைந்திருப்பதுடன், சூழலைப் பாதுகாப்பது மற்றும் சமூகத்தின் நலனை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் அமைந்துள்ளது. புவியை பாதுகாப்பது தொடர்பான ஆழமான அர்ப்பணிப்புடன், SLT-MOBITEL இனால் சூழலுக்கு நட்பான செயன்முறைகள் ஊக்குவிக்கப்படுவதுடன், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களையும் இவற்றுடன் இணைந்து கொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகின்றது. எதிர்காலத் தலைமுறையினருக்கு நிலைபேறான எதிர்காலத்தை உருவாக்குவது தொடர்பில் SLT-MOBITEL அதிகளவு அக்கறை கொண்டிருப்பதுடன், சூழல் நிலைபேறாண்மையை ஊக்குவிப்பது தொடர்பான வினைத்திறனான தந்திரோபாயங்களை நடைமுறைப்படுத்துவது மற்றும் காலநிலை மாற்றத்தை தணிப்பது போன்றவற்றிலும் தன்னை அர்ப்பணித்துள்ளது.
3 minute ago
7 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
7 minute ago
1 hours ago
2 hours ago