2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

செலான் டிக்கிரியினால் “Cooking Kiddos” முன்னெடுப்பு

S.Sekar   / 2021 ஏப்ரல் 20 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் வங்கியின் செலான் டிக்கிரி கணக்கினூடாக, ஒன்லைனில் “Cooking Kiddos” நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. சிறுவர்களின் சமையல் திறனை உலகுக்கு வெளிக்காட்டும் வகையில் இந்த திட்டம் அமைந்திருந்தது. சிறுவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளிலிருந்து சற்று விடுதலை பெற்று, புதிய சமையல் தயாரிப்புகளை முயற்சி செய்வதற்கு வாய்ப்பளித்திருந்தது.

தமது இளம் வாடிக்கையாளர்களை ஈடுபாட்டுடன் பேணுவதற்கு புத்தாக்கமான வழிமுறைகளில் எப்போதும் கவனம் செலுத்தும் செலான் வங்கி, ஒன்லைனில் தமது கற்றல் நடவடிக்கைகளை பெருமளவில் தொடரும் பிள்ளைகளுக்காக சமையல் நிகழ்ச்சியை முன்னெடுப்பது தொடர்பான சிந்தனையை வெளிப்படுத்தியிருந்தது. புதிய விடயங்களை முயற்சி செய்யும் அவர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டும் வகையில், செலான் டிக்கிரியினால், சிறுவர்களால் தயாரிக்கக்கூடிய எளிமையான உணவுகளை சமூக வலைத்தளங்களில் பரந்தளவானோருக்கு காண்பிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் போட்டியில் பங்கேற்றிருந்த செலான் டிக்கிரி வாடிக்கையாளர்களில் முதல் பத்து ஸ்தானங்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்காக வங்கியிடமிருந்து பெறுமதியான அன்பளிப்புகள் பரிசாக வழங்கப்பட்டிருந்தன.

செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைகள் உதவி பொது முகாமையாளர் காமிக டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “பிள்ளைகளை சுறுசுறுப்பாகவும், ஏதேனும் விடயத்தில் ஈடுபாட்டுடனும் பேணுவது என்பது பெற்றோருக்கு மிகவும் கடினமான காரியமாக அமைந்துள்ளது. குறிப்பாக தற்போதைய தொற்றுப் பரவலுடனான சூழலில், சமூகத் தனிமைப்படுத்தல் அவசியமாகியுள்ள நிலையில், குழுநிலைச் செயற்பாடுகளிலிருந்து அவர்களை வேறுபடுத்தி பேணச் செய்துள்ளது. முடக்க நிலை காணப்பட்ட காலப்பகுதியில் டிஜிட்டல் முறையில் அதிகளவு ஈடுபாட்டை பேணும் சிறுவர் சேமிப்புக் கணக்காக செலான் டிக்கிரி காணப்பட்டதுடன், இந்த ஆண்டிலும் சிறுவர்களுக்காக புத்தாக்கமான செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். அதில் முதலாவது அங்கமாக, “Cooking Kiddos” அமைந்திருந்தது. இந்தத் திட்டத்துக்கு பெரும் வரவேற்புக் கிடைத்திருந்ததுடன், எமது சிறு வாடிக்கையாளர்கள் மீது நாம் தொடர்ந்தும் கவனம் செலுத்துவோம்.” என்றார்.

கடந்த ஆண்டில் நீடித்த முடக்கநிலை அமுலில் இருந்த போது, சிறுவர்கள் மத்தியில் அதிகளவு ஈடுபாட்டை பேணுவதில் செலான் டிக்கிரி முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தது. இதில் Tikiri lock down diary, டிக்கிரி டிஜிட்டல் அவுருது, வெசாக் பத்தும், டிக்கிரி சாம்ப், ஸ்டோரி டெலிங் போன்ற பல செயற்பாடுகள் அடங்கியிருந்தன. இந்த செயற்பாடுகள் அவர்களின் கவனத்தை ஈர்த்திருந்ததுடன், தமது வீடுகளில் அடைபட்டுக்காணப்பட்ட நிலையில் அவர்களை தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் பேணியிருந்தது. டிஜிட்டல் செயற்பாடுகளில் பெற்றோரையும் ஈடுபடுத்தும் வகையில் கலாநிதி. குமுது டி சில்வா உடன் கைகோர்த்து ‘டிக்கிரி ஸ்டோரி டெலர்’ எனும் வீடியோத் தொடரை சமூக வலைத்தளத்தில் செலான் வங்கி முன்னெடுத்திருந்தது. இதன் போது தனிமைப்படுத்தப்பட்டிருக்கையில் சிறுவர்களை எவ்வாறு பராமரிப்பது மற்றும் பிள்ளைகளுடன் வீடுகளில் மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகள் போன்றன பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

இந்த ஆண்டிலும் சமூக வலைத்தளத்தில் தொடர்ச்சியான டிஜிட்டல் பிரசன்னத்தை முன்னெடுக்கும் நோக்குடன், செலான் டிக்கிரியுடன் புதிய அம்சங்களை அனுபவிக்கும் வகையில் மேலும் பல டிஜிட்டல் திட்டங்களை முன்னெடுக்க செலான் வங்கி திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு டிஜிட்டல் திட்டத்திலிருந்தும் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .