Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூன் 23 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் வங்கி, தனது தூர நோக்குடைய பரந்த சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களினூடாக, மில்லியன் கணக்கான இலங்கையர்களை சென்றடைந்துள்ளது. ஒரு தசாப்த காலப்பகுதிக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட செலான் பஹசர திட்டத்தினூடாக, நாடளாவிய ரீதியில் பின்தங்கிய பாடசாலைகளில் நூலகங்களை நிறுவும் திட்டத்தில், 225 ஆவது நூலகம் அண்மையில், மஹரகம, தர்மாசோக ஆரம்ப பாடசாலையில் திறந்து வைக்கப்பட்டது. செலான் வங்கியின் 25 வருடப் பூர்த்தியை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடசாலை நூலகங்கள் நிறுவும் திட்டம், தற்போது, வங்கி தனது 35 வருடப் பூர்த்தியைக் கொண்டாடும் நிலையில், இந்த 225 ஆவது நூலகத்தை திறந்துள்ளமை விசேட அம்சமாகும்.
இந்த நூலகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில், செலான் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரட்ன, பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி ரமேஷ் ஜயசேகர மற்றும் பிரதம நிதி அதிகாரி சம்பிகா தொடம்வல ஆகியோருடன், பிரதேசக் கல்வி பணிப்பாளர் தினேஷிகா குணரட்ன மற்றும், தர்மசோக ஆரம்ப பாடசாலையின் அதிபர் சிந்தா பெரேரா மற்றும் உப, பிரதி அதிபர்களும் கலந்து கொண்டனர். பாடசாலையின் 110 வருட பூர்த்தி தினத்தன்று இந்த நூலக அன்பளிப்பு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாடவிதானம் மற்றும் இணைந்த பாடவிதானம் ஆகியவற்றுடன் இணைந்த கல்வித் தரத்தை மேம்படுத்துவதனூடாக, இளம் சிந்தனையாளர்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் செலான் பஹசர நிறுவப்பட்டிருந்தது. இளம் பராயத்தினர் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்திருப்பதுடன், தமது கல்வியை சீராகத் தொடர்வதற்கும், எதிர்காலத்தில் எழக்கூடிய சவால்களுக் நம்பிக்கையுடன் திடமாக முகங்கொடுக்கக்கூடியவர்களாக அவர்களை தயார்ப்படுத்துவதற்கு உதவும் வகையிலும் அமைந்துள்ளது. தரமான கல்வி என்பதில், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை உள்வாங்கி (இலக்கு 4), வழங்கியிருந்த வாக்குறுதிக்கமைய 225 நூலகங்களை வங்கி வெற்றிகரமாக நிறுவியுள்ளதுடன், அவற்றில் கணனிகள் மற்றும் மல்டிமீடியா புரொஜெக்டர்கள் ஆகியவற்றையும் நிறுவியுள்ளது. தரமான பயிலலுக்கு அவசியமான புத்தகங்கள் மற்றும் மெய்நிகர் புத்தகங்களையும் வழங்கி, பாடவிதானம் மற்றும் இணைந்த பாடவிதானம் ஆகியவற்றை ஏற்படுத்தி, மாணவர்களுக்கு தரமான கல்வியைத் தொடர வாய்ப்பை வழங்கியுள்ளது.
வங்கியின் நிலைபேறான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் முக்கிய பங்களிப்பை வழங்கும், செலான் வங்கியின் பிரதம நிதி அதிகாரி சம்பிகா தொடன்வெல, கருத்துத் தெரிவிக்கையில், “மக்களின் மனங்களில் உறுதியான மற்றும்நன்மதிப்பைப் பெற்ற கூட்டாண்மை நிறுவனமாக செலான் வங்கி தன்னை தரமுயர்த்தியுள்ளது. அடுத்த தலைமுறையினருக்கான எமது கனவுகளின் வெளிப்பாடாக, “செலான் பஹசர” அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. கல்வியறிவை மேம்படுத்துவதுடன், மாணவர்களுக்கு தமது கனவுகளை கட்டமைத்துக் கொள்வதற் வழிகாட்டும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. 225 பாடசாலைகளின் ஆயிரக் கணக்கான சிறுவர்கள் மத்தியில் இளம் வயதிலிருந்து வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. எதிர்காலத்தின் முன்னேற்றப் பயணத்தில், கல்வியறிவு என்பது முக்கிய இடம்பெறும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். எதிர்காலத் தலைவர்களுக்கு கல்வி மற்றும் பயிலலுக்கு அவசியமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதையிட்டும், எதிர்காலத் தலைமுறையினரின் திறமைகளை வெளிக் கொணர்வதில் பங்காற்றுவதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். எமது ஊழியர்களையும், அனுகூலம் பாடசாலைகளின் அதிகாரிகளையும் ஒன்றிணைத்து, சமூகத்தில் பயனுள்ள பங்களிப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் அமைந்திருந்தமை விசேட அம்சமாகும்.” என்றார்.
இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் செலான் வங்கியின் ஊழியர்கள், தம்மை இந்தத் திட்டத்துக்கு அர்ப்பணித்திருந்தனர். பாடசாலை நிர்வாகத்தினர், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளர்கள் மற்றும் உயரதிகாரிகளை ஈடுபடுத்தும் வகையில் இந்தத் திட்டம் அமைந்திருந்தது. நோக்கத்தைக் கொண்ட சமூகப் பொறுப்புணர்வுத் திட்டம் எனும் வகையில், செலான் பஹசர என்பது, பணிப்பாளர் சபையின் தொடர்ச்சியான மீளாய்வு மற்றும் கடும் வழிகாட்டுதல்களினால் முறையாக நிர்வகிக்கப்பட்டிருந்ததுடன், அதன் உச்சப் பயன் மாணவர்களைச் சென்றடைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
21 minute ago
27 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
27 minute ago
43 minute ago