2025 மே 07, புதன்கிழமை

செலான் வங்கி இலகு கொடுப்பனவுத் திட்டங்களை செயற்படுத்தல்

S.Sekar   / 2022 செப்டெம்பர் 16 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்லைன் கொடுப்பனவு app ஆன Koko உடன் செலான் வங்கி கைகோர்த்திருந்தது. அதனூடாக, அதன் அட்டைதாரர்களுக்கு ஒன்லைன் மற்றும் விற்பனை நிலையங்களில் பரந்தளவு அனுகூலங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளது. செலான் டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைதாரர்களுக்கு விலைக்கழிவுகள் கிடைப்பதுடன், 3 மாத இலகு தவணைமுறை மீளச் செலுத்தும் வசதி மற்றும் 0% வட்டியில்லாத மீளக் கொடுப்பனவு போன்றவற்றை Koko ஊடாக செலான் அட்டையை பயன்படுத்தும் போது பெற்றுக் கொள்ள முடியும்.

செலான் டெபிட் கார்ட்தாரர்களுக்கு Koko app ஐ டவுன்லோட் செய்து கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள ஆரம்பிக்கையில் ரூ. 5000க்கு மேற்பட்ட கட்டணப்பட்டியல்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் போது ஆகக்கூடியது ரூ. 1000 வரை விலைக்கழிவைப் பெற்றுக் கொள்ளக்கூடிய பிரத்தியேகமான சலுகை 2022 செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை வழங்கப்படும். KOKO ஐ பயன்படுத்தும் விசேட அம்சம் யாதெனில், டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட்தாரர்களுக்கு இது செயற்படுத்தப்பட்டுள்ளதுடன், மொத்தத் தொகையை எவ்விதமான வட்டிக் கட்டணமுமின்றி 3 தவணைகளாக பிரித்துக் கொள்ளலாம். Koko உடன் பதிவு செய்து கொண்டுள்ள பரந்தளவு விற்பனையாளர்கள், செலான் வாடிக்கையாளர்களுக்கு ஒன்லைன் மற்றும் நேரடி விற்பனை நிலையங்களிலிருந்து தமக்கு பிடித்த விற்பனைப் பகுதியை தெரிவு செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகின்றது.

செலான் அட்டைதாரர்களுக்கு தமது அட்டையை பயன்படுத்தி சொப்பிங் செய்கையில் மற்றும் ஒன்லைனில் அல்லது நேரடி விற்பனைப் பகுதிகளான Simplytek, Life Mobile, Fitness Island, Spa Ceylon மற்றும் முன்னணி உணவகங்களான Barista, Arthurs Pizza, Cafe Kumbuk, Acropol, English Cake factory போன்ற பலவற்றில் Koko ஊடாக கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் போது அவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட தீர்வை வழங்குவதாக அமைந்துள்ளது. இந்தச் சலுகைகள் மற்றும் கொடுப்பனவுத்திட்டங்கள் போன்றன Mimosa, Nanotek Computers, Supplement Factory, Beverly Street, Spring & Summer மற்றும் Exclusive Lines போன்றவற்றில் சொப்பிங்கில் ஈடுபடுவோருக்கும் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களுக்கு விரைவில் தற்போது பிரயாணம் செய்து, காலப்போக்கில் கொடுப்பனவை மேற்கொள்ளும் வசதியும் அறிமுகம் செய்யப்படும். இதற்காக இலங்கையின் முன்னணி புகழ்பெற்ற ஹோட்டல் தொடர்கள் மற்றும் சுற்றுலாப் பகுதிகள் போன்றன அடுத்த சில மாதங்களில் உள்வாங்கப்படும்.

செலான் வங்கியின் அட்டைகள் பிரிவின் தலைமை அதிகாரி ருச்சித் லியனகே கருத்துத் தெரிவிக்கையில், “Koko போன்ற கொடுப்பனவு appகளை பயன்படுத்தும் போது எமது வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு மட்டங்களில் சொப்பிங் செய்யும் அனுகூலம் கிடைக்கும். ஒன்லைனில் சொப்பிங் செய்வது என்பது இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் அனுகூலமளிப்பதாக அமைந்துள்ளது. மிக முக்கியமாக, தவணை முறையில் மீளச் செலுத்தும் வசதி காணப்படுவதால், வாடிக்கையாளர்களுக்கு தமக்கு அவசியமான பொருட்களை கொள்வனவு செய்து கொள்ள முடிவதுடன், அதற்கு செலான் கார்ட்கள் மற்றும் Koko ஆகியன ஆதரவளிக்கின்றன. பொருத்தமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எமது வாடிக்கையாளர்களுக்கு வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்வதற்கு வழிமுறைகளை வழங்குவதில் செலான் வங்கியைச் சேர்ந்த நாம் அதிகளவு கவனம் செலுத்துகின்றோம். இதனை செயற்படுத்தும் பல பங்காண்மைகளை நாம் ஏற்படுத்தியுள்ளதுடன், அவ்வாறான பங்காண்மைகளில் ஒன்றாக Koko அமைந்திருப்பதுடன், செலான் அட்டைதாரர்களுக்கு பெருமளவில் அனுகூலமளிப்பதாக அமைந்திருக்கும்.” என்றார்.

Koko இன் விஸ்தரிப்பு தலைமை அதிகாரி கசுன் டிகொஸ்தா கருத்துத் தெரிவிக்கையில், “சொப்பிங் செய்பவருக்கு Koko இன் ‘Buy Now Pay Later’ வசதி என்பது சௌகரியமான கொடுப்பனவுத் தெரிவாக அமைந்துள்ளதுடன், சிறந்த தீர்வாகவும் அமைந்துள்ளது.” என்றார்.

அத்தியாவசிய அட்டை எனும் வகையில், அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு எப்போதும் உடனிருக்கும். வாடிக்கையாளரின் போக்கை பரிபூரணமாக புரிந்து கொண்டு. தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு கொடுப்பனவுகள் மற்றும் சொப்பிங் மேற்கொள்வதற்கு Koko மேலும் வசதியளிப்பதாக அமைந்திருப்பதுடன், சௌகரியம், அணுகும் திறன் மற்றும் சௌகரியமான கொடுப்பனவு முறைகளை வழங்கும் வகையில் அமைந்திருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X