Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 நவம்பர் 15 , பி.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் வங்கிக்கு நியு யோர்க்கின் Wells Fargo Bank, N.A இனால் 2017 - 2018 காலப்பகுதிக்கு “விசேட கௌரவிப்பு விருது” வழங்கப்பட்டுள்ளது.
செலான் வங்கி சர்வதேச வியாபார மற்றும் இதர கொடுப்பனவு சமூகத்தில் தொடர்ச்சியாக பேணி வரும் வினைத்திறனை மேம்படுத்தலுக்கான அர்ப்பணிப்பு, உயர் கொடுக்கல் வாங்கல் காலம் போன்றவற்றுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
Wells Fargo Bank இன் மட்டுப்படுத்தப்பட்டளவு நிதி நிறுவனங்களை இந்த விருது கௌரவித்திருந்தது. உலகளாவிய ரீதியில் 1500 பங்காளர் வங்கிகளின் 10 சதவீதத்தை இந்த வங்கி தன்னகத்தே கொண்டுள்ளது. தொடர்ச்சியான இரு வருடங்கள் இந்த விருதை பெற்றுக் கொண்ட இலங்கையின் ஒரே வங்கியாக செலான் வங்கி அமைந்துள்ளது.
வட அமெரிக்காவில் காணப்படும் மிகவும் பெறுமதி வாய்ந்த வங்கியியல் வர்த்தக நாமமாக Wells Fargo அமைந்துள்ளதுடன், சிறந்த வாடிக்கையாளர் வங்கியியல் (2017) மற்றும் மூன்றாவது சிறந்த பெறுமதி வாய்ந்த நிதிச் சேவைகள் வர்த்தக நாமம் (2017) எனும் கௌரவிப்பை பிரான்ட் ஃபினான்ஸ் மற்றும் ஃபோர்ப்ஸ் இடமிருந்து பெற்றுள்ளது. USD சர்வதேச கொடுக்கல் வாங்கல் சேவைகளை மேற்கொள்வதற்காக ஆறு வருட காலமாக தொடர்ச்சியாக கௌரவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நிதிச் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நிறுவனங்களில் முதல் தர நிறுவனமாகவும் FImetrix Global Stats இனால் தரப்படுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago