Editorial / 2019 ஜூன் 06 , பி.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் வங்கியின் ‘பாங்க்கசூரன்ஸ்’ பிரிவின் கீழ் சிறப்பாகச் செயலாற்றியிருந்த ஊழியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
‘Bancassurance Felicitation Night’ எனும் தலைப்பில் இந்நிகழ்வு JAIC ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. செலான் வங்கியின் வரகாபொல கிளை சிறந்த ‘பாங்க்கசூரன்ஸ்’ கிளையாகத் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், சிறந்த வியாபார அறிமுகப்படுத்துநர் விருதை துஷார வஹிஷ்ட பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் செலான் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரட்ன, யூனியன் அஷ்யூரன்ஸின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டேர்க் பெரேரா இரு நிறுவனங்களின் சிரேஷ்ட முகாமைத்துவ அணியினரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .