Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 01 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலிங்கோ லைஃவ் அடுத்த இரண்டு மாத காலப் பகுதியில் அதன் மூன்று இலட்சம் வாடிக்கையாளர்கள் மத்தியில் 4.4 பில்லியன் ரூபாயை வருடாந்த போனஸாகப் பகிர்ந்தளிக்க உள்ளது.
ஆயுள் காப்புறுதித்துறை சந்தைத் தலைவரின், 2017 ஆயுள் நிதியத்தில் திரட்டப்பட்ட நிதியின் மூலம் வழங்கப்படும் இந்த போனஸ், அவர்களின் காப்புறுதிக் கொள்கைக்கு கணிசமான பெறுமதியை அதிகரிக்கவுள்ளது.
இவற்றைப் பெற்றுக் கொள்ளவுள்ள வாடிக்கையாளர்களுள் 15ஆயிரம் பேர், விசேட பண்டிகைக் கால கொடுப்பனவாக 71 மில்லியன் ரூபாயையும் பெறவுள்ளனர். இந்தத் தொகை இவர்களுக்கு உடனடியாக மாற்றிக் கொள்ளத்தக்க காசோலைகளாகப் பகிர்ந்தளிக்கப்படும்.
செலிங்கோ லைஃவ் உன்னத பண்புகளில் ஒன்றான வாடிக்கையாளரின் விசுவாசத்துக்கான வெகுமதியாக, இந்த போனஸ் வழங்கப்படவுள்ளது.
கம்பனியின் வரலாற்றில் இம்முறை வழங்கப்படவுள்ள 4.4 பில்லியன் ரூபாய் ஆகக் கூடிய போனஸ் தொகையாகப் பதிவாகி உள்ளது. மேலும் 2017ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 16 சதவீத அதிகரிப்பைப் பிரதிபலிக்கின்றது.
கம்பனியின் வருடாந்த போனஸ் பிரகடனம் பற்றி கருத்து வெளியிட்ட செலிங்கோ லைஃவ் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஆர்.ரெங்கநாதன் “கடந்த ஆண்டில் கவர்ச்சிகரமான வளர்ச்சியை நாம் பதிவு செய்துள்ளோம். எமது பிரதான வர்த்தகம், முதலீடுகள், செலவுக் கட்டுப்பாடுகள் என்பன மூலம் இது சாத்தியமாகியுள்ளது. இந்த நன்மைகளை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். எமது வாடிக்கையாளர்களுக்குச் சேர வேண்டிய நன்மைகள், வெகுமதிகள், சமூக நன்மைகள் என்பனவற்றை நாம் ஒருபோதும் வரையறை செய்வதில்லை. எமது திறமையான செயற்பாட்டு ஆற்றல்கள் மூலம், பெற்றுக் கொள்ளப்பட்ட நன்மைகள் போனஸ் கொடுப்பனவாக வாடிக்கையாளர்கள் மத்தியில் தாராளமாகப் பகிரப்படுகின்றது” என்று கூறினார்.
57 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago