Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 செப்டெம்பர் 25 , பி.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோவிட்-19 தொற்றுநோய் பரவலை தொடர்ந்து நடைபெறும் முதல் தேசிய அளவிலான விளையாட்டு போட்டி, இலங்கையின் சிறந்த கைப்பந்து போட்டியான – டயலொக் ஆசிஆட்டா அனுசரணை வழங்கும் ஜனாதிபதி தங்கக் கிண்ணம் 2019 இன் இறுதிப் போட்டி, 2020 செப்டெம்பர் 26 ஆம் திகதி மஹரகம இளைஞர் மன்றத்தில் இடம்பெறவுள்ளது.
உலகளாவிய தொற்றுநோயால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தடுக்கும் வகையில் சுகாதார அமைச்சும் விளையாட்டு அமைச்சும் வழங்கிய உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அமைய இரண்டு நாட்கள் இறுதிப் போட்டி இடம்பெறவுள்ளது.
டயலொக் அனுசரணை வழங்கும் ஜனாதிபதி தங்கக் கிண்ணம் மகளீருக்கான இறுதிப் போட்டி மகா-உஸ்வே ரத்தனபாலா மற்றும் ராதவானா கோல்டன் பேர்ட் இடையே இடம்பெறவுள்ளதுடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, கடுமையாகப் போராடிய ஆண்களுக்கான இறுதிப் போட்டி கம்பாஹா சியானாதாரு மற்றும் டெபகாம ரத்நாதாரு ஆகிய அணிகளுக்கிடையே பிற்பகல் 1.00 மணி முதல் மஹரகம இளைஞர் மன்றத்தில் இடம்பெறவுள்ளது. இந்த போட்டியை நேரடியாக ITN அலைவரிசையில் பார்வையிட முடியும்.
கோவிட் -19 தொற்றுநோய் பரவலையடுத்து, இலங்கையின் முதல் தேசிய அளவிலான போட்டியை இலங்கையின் தேசிய விளையாட்டோடு இணைந்து நடத்துவது உண்மையில் ஒரு பெருமைக்குரிதாகவும் மாபெரும் பாக்கியமாகவும் காணப்படுகின்றது. இந்த சவாலான காலகட்டத்தில் இந்த போட்டியை நடத்த எங்களுக்கு அளித்த ஆதரவுக்கு எங்கள் பெருமைக்குரிய முதன்மை அனுசரணையாளரான டயலொக் ஆசிஆட்டா நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்று இலங்கை கைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் கௌரவ அமைச்சர் நாடாளுமன்ற துணை சபாநாயகர் மற்றும் குழுக்களின் தலைவர் ரஞ்சித் சியம்பலபிட்டி தனது உரையில் தெரிவித்தார்.
இலங்கையில் நடைபெறவிருக்கும் பிரமாண்டமான போட்டியான டயலொக் அனுசரணை வழங்கும் ஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் சாம்பியன்~pப் போட்டி, உத்தியோகப்பூர்வமாக 2019 செப்டெம்பர் மாதத்தில் 2,500 அணிகளுடனும் 40,000 க்கும் மேற்பட்ட வீரர்களுடனும் ஆரம்பிக்கப்பட்டது.
கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் வகுத்துள்ள சமூக தொலைதூர ஒழுங்குமுறைகளின் விளைவாக, போட்டியின் இறுதி மற்றும் டயலொக் தேசிய கனி~;ட கைப்பந்து சாம்பியன்~pப் மற்றும் ஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் சாம்பியன்~pப் இறுதிப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. வீரர்கள் மற்றும் பார்வையாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை கவனமாக பரிசீலனை செய்யப்பட்ட பின்னரே மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் இறுதிப் போட்டியில், முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன்களாக சியநேதரு எஸ்.சி மற்றும் Casual விளையாட்டு கழகம் ஆகியவை தெரிவு செய்யப்பட்டன.
இலங்கை தேசிய கிரிக்கெட், ரக்பி, கைப்பந்து மற்றும் கூடைப்பந்து அணிகளின் பெருமைக்குரிய ஆனசரணையாளராக திகழும் டயலொக் ஆசிஆட்டா நிறுவனம், ஜனாதிபதியின் தங்கக் கைப்பந்துடன் கிண்ணம், தேசிய கனி~;ட மற்றும் சிரே~;ட நெட்பால் போட்டிகள், பிரீமியர் கால்பந்து, பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுக்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளது. இராணுவ பாரா விளையாட்டு, தேசிய பாரா விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் மற்றும் உலக பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கை அணியின் ஆதரவாளராகவும் திகழ்கின்றது.
27 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
45 minute ago
2 hours ago